வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியீடு

SHARE

 ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியீடு !!!

கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். 

இதை அடுத்து ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து உள்ளது.

இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்க உள்ளார்.

படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று இரவு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்து உள்ளது. 

ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவு அடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-படப்பிடிப்பு தொடங்குகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: