செவ்வாய், 3 மார்ச், 2026

மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க வுக்கு 1 இடம் ஒதுக்கீடு : தி.மு.க வுடன் சுமுக உடன்பாடு !!!

SHARE

 மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க வுக்கு 1 இடம் ஒதுக்கீடு : தி.மு.க வுடன் சுமுக உடன்பாடு !!!

மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வுக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டது. தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை கடந்த பிப். 22 முதல் நடைபெற்று வருகிறது. 

தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க உள்பட புதிய கட்சிகள் இணைந்து உள்ளதால் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை இழுபறியில் உள்ளது.

இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க) தரப்பில் இருந்து அக்கட்சியின் பொருளாளர் எல். கே. சுதீஷ் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க) தலைவரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலினுடன் கலந்து பேசியதில் தொகுதிப் பங்கீட்டில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க வுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: