புதன், 4 மார்ச், 2026

நெல்லை - நான்குநேரி கொலை: மாணவர் சின்னதுரை மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்பு ?

SHARE

 நெல்லை - நான்குநேரி கொலை: மாணவர் சின்னதுரை மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்பு ?

நெல்லை, நான்குநேரி கொலை வழக்கில், கடந்த 2023-இல் மாணவர் சின்னதுரை மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கும் விசாரணை அதிகாரிகள் இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே பெரும்பத்து கடைத்தெரு பகுதிக்கு திங்கள்கிழமை நேற்று இரவு 7 மணி அளவில் இருசக்கர வாகனங்களில் கும்பலாக வந்த 9 பேர், அங்கு நின்ற மக்களை அரிவாளால் சரமாரியாக வெட்டினராம்.

அப்போது, 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில், பெரும்பத்து இந்திரா காலனியை சோ்ந்த ஜான் (42) என்பவரும், வடமாநில தொழிலாளி ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் நெல்சன் (58), பால்வண்ணன் மகன் பிரபாகரன், வைகுண்டம் மகன் ராமசாமி, வீராங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன் (53) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

பின்னர், அந்த கும்பல் அங்கு இருந்து புளியங்குளம் கிராமத்துக்குச் சென்று, அங்கு நின்று இருந்த சுப்பிரமணியன் மகன் சசிகுமாா் (45) என்பவரையும் அரிவாளால் தாக்கி உள்ளனர். 

இச்சம்பவத்தில் நெல்சன், கணேசன் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து உள்ள நான்குநேரி போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நான்குநேரி கொலை வழக்கில், கடந்த 2023-இல் மாணவர் சின்னதுரை மீது நான்குனேரியில் சாதிய வன்ம தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கும் விசாரணை அதிகாரிகள், மேலும் இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: