திங்கள், 30 மார்ச், 2026

கோவையில் கோர விபத்து : லாரி மோதி 11-ம் வகுப்பு மாணவி துடிதுடிக்க பலி - ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு !!!*

SHARE

 கோவையில் கோர விபத்து : லாரி மோதி 11-ம் வகுப்பு மாணவி துடிதுடிக்க பலி - ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு !!!

தமிழக - கேரளா எல்லையான கோவை, பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை கே.ஜி.சாவடி பகுதியில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில் 11 வகுப்பு படிக்கும், 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 கோவை, கே.ஜி சாவடி தாட்கோ காலனி பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகள் ஸ்ரீநிதி (16), குனியமுத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

 இவர் மாலை சுமார் 6.45 மணி அளவில், தனது வீட்டின் முன்னே இருந்த துவைக்கும் கல்லில் அமர்ந்து சிறுமி படித்துக் கொண்டு இருந்த போது, சர்வீஸ் ரோட்டில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி 'KL 09 AY 9574' என்ற எண் கொண்ட எச்.பி (HP) கேஸ் டேங்கர் லாரி அதிவேகமாகப் வந்தது.

 ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையோரம் அமர்ந்து இருந்த சிறுமி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சிறுமி ஸ்ரீநிதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவ, ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் தாட்கோ காலனி பள்ளிவாசல் எதிரே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. 

இந்த சம்பவ நடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகி உள்ளது. 

 விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் அங்கு இருந்து தப்பியோடிய நிலையில், அவரை உடனடியாகக் கைது செய்யக் கோரி பொதுமக்கள் முழக்கமிட்டதால் அந்த இடமே பரபரப்பான சூழல் நிலவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஜி.சாவடி போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ள போலீசார், அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 11 ம் வகுப்பு பள்ளி மாணவி தனது வீட்டு வாசலிலேயே விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: