கோவையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 76 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை - கோவை நீதிமன்ற தீர்ப்பு !!!
கோவை வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி 76, இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு பதிவு செய்து, ரவியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்க விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறையும், ரூபாய் 42,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.

0 கருத்துகள்: