வெள்ளி, 27 மார்ச், 2026

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு - இன்றைய நிலவரம் !!!

SHARE

 தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு - இன்றைய நிலவரம் !!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 26) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து உள்ளது.

மேற்காசிய நாடுகளுக்கிடை போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், கடந்த சில நாள்களாக தங்கத்தில் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 5,360 குறைந்து ரூ.1,03,600-க்கும், பின்னர் பிற்பகலில் விலை மீண்டும் சவரனுக்கு ரூ. 2,240 குறைந்து ரூ.1,01,360-க்கும் விற்பனையானது.

இதன் பின்னர், ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை 15% குறைந்த நிலையில், திங்கள்கிழமை மாலையே மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.13,340-க்கும், சவரனுக்கு ரூ.1,06,720-க்கும் விற்பனையானது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ. 106,000, புதன்கிழமை ரூ. 108,800-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ. 109,360-க்கும், ஒரு கிராம் ரூ. 13,670-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 260-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: