புதன், 4 மார்ச், 2026

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: பங்கு சந்தையில் ரூ. 16.32 லட்சம் கோடி இழப்பு !!!

SHARE

 அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: பங்கு சந்தையில் ரூ. 16.32 லட்சம் கோடி இழப்பு !!!

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் சூழ்நிலை காரணமாக இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவை எதிர்நோக்கி வருகின்றன.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதலை தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட இரண்டு நாள் சரிவில், முதலீட்டாளர்கள் ரூ.16.32 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிப்ரவரி 28 முதல் ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான மோதல் தொடங்கி நடைபெற்று வருவதால், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் இன்று வரையான சென்செக்ஸ் 2,171 புள்ளிகள் சரிந்து உள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் சென்செக்ஸில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.16,32,428.12 கோடி சரிந்து ரூ.4,47,18,243.15 கோடியாக உள்ளது.

இன்றைய தொடக்க வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தை சரிந்து வர்த்தகமானது. பலவீனமான உலகளாவிய குறிப்புகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகலாவிய அரசியல் பதற்றங்களுக்கு நடுவில் வர்த்த போக்கும் சரிவை நோக்கி பயணித்தன. அதே வேளையில், தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிதி உள்ளிட்டவை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை முற்றிலும் குலைத்தது.

பி.எஸ்.இ-யில் செலக்ட் ஸ்மால்கேப் இன்டெக்ஸ் 2.42 சதவீதமும், மிட்கேப் செலக்ட் இன்டெக்ஸ் 2.10 சதவீதமும் சரிந்தன.

துறை வாரியான குறியீடுகளில், உலோகம் 4 சதவீதமும், பி.எஸ்.இ-யில் பொதுத்துறை வங்கி 3.50 சதவீதமும், தொழில் துறை 3.29 சதவீதமும், ரியல் எஸ்டேட் 3.16 சதவீதமும், மூலதன பொருட்கள் 2.64 சதவீதமும், மின்சாரம் 2.59 சதவீதமும், சேவை துறை 2.25 சதவீதம் மற்றும் எரிசக்தி 2.23 சதவீதம் சரிந்தன.

இன்றைய மும்பை பங்குச் சந்தையில் 3,245 பங்குகள் சரிந்த நிலையில் 1,053 பங்குகள் உயர்ந்தும் 135 பங்குகள் மாற்றமின்றி முடிவு அடைந்தன.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: