விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 செப்டம்பர், 2026

"நள்ளிரவில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிய தகரக் கொட்டகையை நொறுக்கிய ஒற்றை யானை" ; அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய தொழிலாளர்கள் - கோவையில் பரபரப்பு!

"நள்ளிரவில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிய தகரக் கொட்டகையை நொறுக்கிய ஒற்றை யானை" ; அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய தொழிலாளர்கள் - கோவையில் பரபரப்பு!

2 மணி நேரம் போராடி வனத்துறையினர் விரட்டினர்: தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அச்சம்!

 கோவை, துடியலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்துச் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, வனக்கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.

​கதிர் நாயக்கன்பாளையம் மற்றும் லட்சுமி நகர் (பேஸ் 3) ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த அந்த யானை, அங்கு இருந்த ஒரு விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு மாடுகளுக்காகச் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பசுந்தீவனங்களைச் சாப்பிட்டதுடன், அங்கே குரைத்த நாய்களையும் ஆக்ரோஷமாகத் துரத்தியது.

இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் அருகில் உள்ள கட்டிடக் கட்டுமானப் பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை நோக்கி அந்த ஒற்றை யானை நகர்ந்தது. கொட்டகையின் தகரங்களை உடைத்து நொறுக்கிய யானை, உள்ளே வைக்கப்பட்டு இருந்த அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தியது.

​யானை கொட்டகையைத் தாக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த வடமாநிலத் தொழிலாளர்கள், உயிருக்குப் பயந்து அலறி அடித்தபடி ஓடிச் சென்று அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்திற்குள் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாகப் பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள், குடியிருப்புப் பகுதியில் நின்று இருந்த ஒற்றை யானையைக் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அதிகாலை வேளையில் யானை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.

கதிர் நாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான மணி நகர், கணபதி நகர், கணபதி கார்டன், போஸ்டல் காலனி, ஆர்.வி.நகர், பூச்சியூர், வெற்றிவேலவா நகர், ரேணுகாபுரம் மற்றும் லட்சுமி நகர் ஆகிய இடங்களில் இந்த ஒற்றை யானையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

​அதேவேளையில், இரவில் இப்பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு ஏற்படுவதால், இருளில் யானை வருகையைக் கண்காணிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த பீதியில் உறைந்து உள்ளனர். எனவே, மின்வாரியமும் வனத்துறையும் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் தெருவிளக்குகள் தடையில்லாமல் எரிய வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய் - மனமகிழ காவிரி நீருக்கு மலர் தூவி மரியாதை!

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய் - மனமகிழ காவிரி நீருக்கு மலர் தூவி மரியாதை!

சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். அணையில் இருந்து வெளியேறிய காவிரி நீரில் பூக்கள், நெல் ஆகியவற்றை தூவி மரியாதை செலுத்தினார்.

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து இன்று (செப்.1) நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்காக காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் சேலம் வந்தடைந்தார். பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்த முதலமைச்சருக்கு அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து, சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்கு வந்த முதலமைச்சர் விஜய். வழியெங்கும் திரளாக குவிந்து இருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனத்தின் மேல் இருந்து பொதுமக்களின் வரவேற்பை ஏற்றப்படி முதலமைச்சர் விஜய் மேட்டூருக்கு வருகை தந்தார்.

அதனைய அடுத்து, மேட்டூர் அணை நுழைவாயிலில் அவருக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். அதனை ஏற்றுக் கொண்டு அணைக்கு சென்ற அவர், காவிரியை வணங்கி, மேல தாளங்கள் முழங்க அணையின் மதகுகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, அணையில் இருந்து வெளியேறிய காவிரி நீரில் பூக்கள், நெல் ஆகியவற்றை தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், அங்கு கூடி இருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்க்கு, காவிரியில் மேட்டூர் அணையின் கட்டுமானம் தொடர்பாக வைக்கப்பட்டு இருந்த புகைப்படங்களை அரசு அதிகாரிகளுடன் பார்வையிட்டார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியவர்கள் உடன் இருந்தார்.

தற்போது அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் 12 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். முதலமைச்சரின் வருகையையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு அணையில் நீர் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர் வரத்து அதிகரித்தது. அதனை அடுத்து, காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரில் அளவு அதிகரித்து.

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த 4ஆம் தேதி முதல் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.15 அடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீரை முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து திறந்து வைத்து உள்ளார்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

 "நாய்கள் குரைத்த சத்தம்" - துடியலூர் அருகே நள்ளிரவில் உலா வந்த ஒற்றை யானை!

"நாய்கள் குரைத்த சத்தம்" - துடியலூர் அருகே நள்ளிரவில் உலா வந்த ஒற்றை யானை!

 "நாய்கள் குரைத்த சத்தம்" - துடியலூர் அருகே நள்ளிரவில் உலா வந்த ஒற்றை யானை!

உணவு தேடி குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தல்!

 கோவை, துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வனப் பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.

​இந்நிலையில், நேற்று அதிகாலை வேளையில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று கதிர் நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் மெதுவாக நுழைந்தது.

யானை தெருவுக்குள் வருவதைக் கண்ட அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து பலத்த சத்தத்துடன் குரைக்கத் தொடங்கின. 

இதனை அடுத்து ஒற்றை யானை ​சிறிது நேரம் அங்கு இருந்த மரங்கள் மற்றும் வீடுகளின் அருகே உணவைத் தேடி நின்று கொண்டு இருந்த அந்த யானை, பின்னர் மெதுவாக அங்கு இருந்து நகர்ந்து அருகில் உள்ள வனப்பகுதியை நோக்கிச் சென்றது.

கதிர் நாயக்கன்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து காணப்படுவதால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் தேவையற்ற முறையில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வனத்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரித்து வருகின்றனர்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

நடப்பாண்டில் முதன் முறையாக நிரம்பிய பில்லூர் அணை - பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!!

நடப்பாண்டில் முதன் முறையாக நிரம்பிய பில்லூர் அணை - பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!!

 நடப்பாண்டில் முதன் முறையாக நிரம்பிய பில்லூர் அணை - பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!!

கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி.தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலங்களில் பில்லூர் அணை நான்கு முறை நிரம்பியது.ஆனால்,இந்த ஆண்டில் முதன்முறையாக பில்லூர் அணை தனது முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அடைந்தது. 

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீரின் அளவான 8 ஆயிரம் கன அடி நீர் அப்படியே நான்கு மதகுகளின் வழியாக வினாடிக்கு 2060 கன அடி நீர் மற்றும் மின் உற்பத்திக்காக 6 ஆயிரம் கன அடி நீர் என மொத்தமாக 8060 கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் தேக்கம்பட்டி,நெல்லித்துறை, ஓடந்துறை,பாலப்பட்டி, ஊம்ப்பாளையம்,வச்சினம்பாளையம்,சிறுமுகை,லிங்காபுரம் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

திங்கள், 20 ஜூலை, 2026

ஏண்டா உனக்கு இதே வேலையா போச்சு ? பைப்பை ஏண்டா போட்ட!" - ஓடையில் தண்ணீரைத் திருடிய நபரைக் கிழித்தெறிந்த விவசாயி - அதிர்ச்சி வீடியோ !!!

ஏண்டா உனக்கு இதே வேலையா போச்சு ? பைப்பை ஏண்டா போட்ட!" - ஓடையில் தண்ணீரைத் திருடிய நபரைக் கிழித்தெறிந்த விவசாயி - அதிர்ச்சி வீடியோ !!!

 ஏண்டா உனக்கு இதே வேலையா போச்சு ? பைப்பை ஏண்டா போட்ட!" - ஓடையில் தண்ணீரைத் திருடிய நபரைக் கிழித்தெறிந்த விவசாயி - அதிர்ச்சி வீடியோ !!!

பாலத்துறை தடுப்பணையில் ரகசிய மோட்டார் மூலம் பகிரங்கத் திருட்டு: ஆவேசத்தில் விவசாயிகள் – மாவட்ட நிர்வாகத்திற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் !!!

 கோவை, மதுக்கரை அருகே உள்ள சீராபாளையம் கிராமத்தின் பாலத்துறை பகுதியில், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக ஓடைத் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு இருந்த தண்ணீரை, திருட்டுத்தனமாகப் பைப் போட்டு மோட்டார் மூலம் எடுத்த நபரை உள்ளூர் விவசாயி ஒருவர் நேருக்கு, நேராக மடக்கிப் பிடித்து, "ஏண்டா உனக்கு இதே வேலையா போச்சு? பைப்பை ஏண்டா போட்ட!" என ஆவேசத்தின் உச்சத்தில் ஓங்கிச் சத்தம் போட்ட வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி, விவசாயிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 தென்மேற்கு பருவமழை நிலவரம் ஒருபுறமிருக்க, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் விவசாயத் தேவைகளுக்காகவும் மிகுந்த சிரமத்திற்கு இடையே சேமித்து வைக்கப்படும் பொதுச் சொத்தான தண்ணீரை, தனி நபர் ஒருவர் தடுப்புச் சுவரின் மீதே பிரம்மாண்ட பைப்பைப் போட்டுத் திருடி வந்த அராஜகம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

தோட்டத்திற்கு வந்த உள்ளூர் விவசாயி ஒருவர், தடுப்பணையில் தண்ணீர் சட்டவிரோதமாக உறிஞ்சப்படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அந்த நபரைக் கையும், களவுமாகப் பிடித்துத் தன் செல்போனில் வீடியோ பதிவு செய்தபடியே வெளுத்து வாங்கி உள்ளார்.

 ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயச் சங்கம் இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு, “பொது நீர்நிலைகளில் திருட்டுத்தனமாக மோட்டார் வைத்துத் தண்ணீரைக் கடத்தும் நபர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்த மோட்டார் மற்றும் பைப் உபகரணங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்திற்கும் மதுக்கரை வட்டாட்சியருக்கும் அவசரக் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த வீடியோவால், மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் விவாதமும் வெடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.