வெள்ளி, 6 மார்ச், 2026

ரவி மோகன் - யோகி பாபு கூட்டணி - ஆன் ஆர்டினரி மேன் படப்பிடிப்பு தொடக்கம் !!!

SHARE

 ரவி மோகன் - யோகி பாபு கூட்டணி - ஆன் ஆர்டினரி மேன் படப்பிடிப்பு தொடக்கம் !!!

நடிகர் ரவி மோகன் இயக்கும் “ஆன் ஆர்டினரி மேன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

பிரபல நடிகர் ரவி மோகன் சமீபத்தில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்.

அவர் தயாரிக்கும் “ஆன் ஆர்டினரி மேன்” எனும் புதிய படத்தின் மூலம் நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் புதிய படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கின்றார்.

இந்த நிலையில், “ஆன் ஆர்டினரி மேன்” படத்தின் படப்பிடிப்பின் பூஜைகள் நேற்று (மார்ச் 5) நடைபெற்று உள்ளன.

முன்னதாக, நடிகர் ரவி மோகனின் தயாரிப்பில் “ப்ரோ கோட்” எனும் மற்றொரு படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில், நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: