செவ்வாய், 3 மார்ச், 2026

யாருடன் கூட்டணி ? கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை !!!

SHARE

 யாருடன் கூட்டணி ? கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை !!!

கூட்டணி குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதையொட்டி கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை முடிவு செய்துள்ள நிலையில் பா.ம.க வின் ராமதாஸ் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.

அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் அவரது மகன் அன்புமணி இணைந்து உள்ளதால், தி.மு.க அல்லது த.வெ.க வுடன் ராமதாஸ் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இருக்கும் என்று ராமதாஸ் ஒருமுறை கூறி இருந்தார்.

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக தைலாபுரத்தில் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். கூட்டணி குறித்து அவர் இன்று அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: