செவ்வாய், 3 மார்ச், 2026

மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே ? நான்குநேரி கொலைச் சம்பவத்துக்கு விஜய் கண்டனம் !!!

SHARE

 மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே ? நான்குநேரி கொலைச் சம்பவத்துக்கு விஜய் கண்டனம் !!!

நான்குநேரி கொலைச் சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒன்பது பேர் கொண்ட மர்ம கும்பல் சாலையில் சென்றவர்களை சரமாரியாக வெட்டியது. இந்த கொடூர சம்பவத்தில் வடமாநில செங்கல் சூளை தொழிலாளி உள்பட இரண்டு பேர் பலியாகினர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர்.

இந்தக் கொலைச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து த.வெ.க தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.

உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே ?

இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி எங்கே?

நம்பர் 1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா ?

போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா ?

பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா ?

மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி...

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: