கமேனி உயிரிழப்பு : ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்பு !!!
ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுப் படைத் தாக்குதலில் தலைமை மதகுரு கமேனி உயிரிழந்து விட்டதாக ஈரானிய உள்ளூர் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தத் தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரனும் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, ஈரானில் 40 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதுடன், 7 நாள்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி இந்தத் தாக்குதலை அமெரிக்காவும், இஸ்ரேலும் மேற்கொண்டன.
இந்த தாக்குதலில் 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு மகளிா் தொடக்கப் பள்ளி மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 85 மாணவிகள் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

0 கருத்துகள்: