வெள்ளி, 13 மார்ச், 2026

ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் !!!

SHARE

 ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் !!!

ஜம்மு - காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டு உள்ள சமூக வலைதளப் பதிவு:

மக்களாட்சியில் இத்தகைய வன்முறைச் செயல்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. தற்போது ஃபரூக் அப்துல்லா நலமாக உள்ளாா் என்பதை அறிந்து நிம்மதி கொள்கிறேன். அவருக்கும், ஒமா் அப்துல்லாவுக்கும் இந்த வேளையில் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டு உள்ளாா்.

வைகோ (மதிமுக): ஃபரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட செய்தி அறிந்து அதிா்ச்சி அடைந்தேன். அவா் பங்கேற்ற நிகழ்ச்சியில், மத்திய அரசு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய தவறியது கண்டனத்துக்குரியது. வரும் காலங்களில் அவருக்கு தக்க பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: