தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சித் தலைவர்கள் : இன்று எங்கெங்கு பிரசாரம்..?...
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் களம் அனல் பறக்கும் வகையில் அமைந்து உள்ளது. தி.மு.க.,அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன....
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 பேரும், குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரம் மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளில் தலா 5 பேரும் போட்டியிடுகின்றனர்.
தலைவர்கள் இன்று பிரசாரம் செய்யும் தொகுதிகள்:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- நாமக்கல், பெரம்பலூர் பொதுக் கூட்டங்கள்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:- கோவை, நீலகிரி ...
த.வெ.க. தலைவர் விஜய்:- சென்னை, தேர்தல் அறிக்கை வெளியீடு...
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- பென்னாகரம்....
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:- நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருவாரூர், நன்னிலம், கும்பகோணம், பாபநாசம்....
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்:- விருதுநகர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்தியக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத்:- பத்மநாபபுரம்....
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பெ.சண்முகம்:- பழனி, ஒட்டன்சத்திரம்....
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:- செஞ்சி, திருவண்ணாமலை....
பா.ஜனதா முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்:- வாசுதேவநல்லூர்....
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன்:- திருத்துறைப்பூண்டி, நாகை, கீழ்வேளூர்....
பா.ம.க. நிறுவனர்-தலைவர் டாக்டர் ராமதாஸ்:- கும்பகோணம்....
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- ஸ்ரீவில்லிபுத்தூர், வாசுதேவ நல்லூர், கடையநல்லூர்....
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்:- ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, கோவில்பட்டி....

0 கருத்துகள்: