விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி ; கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கடும் விமர்சனம் !!!
அரசியல் என்பது விவசாயம் போல. உடனடியாக பலன் கிடைக்காது என்று த.வெ.க தலைவர் விஜய்யை கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
கர்நாடகா மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் வெளியிட, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதனைப் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம், உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் விஜய்யின் த.வெ.க பக்கம் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி. அவருக்கு அரசியல் முதிர்வு இல்லை. அவருடன் திரிணாமுல் காங்கிரஸ், மூப்பனார் காங்கிரஸ் இருக்கலாம். ஆனால், இந்திய தேசிய காங்கிரஸ் அவருடன் இல்லை. காங்கிரஸ், தி.மு.க-வுடன் உள்ளது. அரசியல் விவசாயம் போல, உடனடியாக பலன் கிடைக்காது. ஒரு நாள், ஒரு வாரத்தில் எதுவுமே செய்துவிட முடியாது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்டு உள்ள அறிக்கை அனைத்து சமூகத்தினருக்குமானது. காங்கிரஸ் எப்போதும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் நலனில் கவனம் செலுத்துகிறது. 3 லட்சம் அரசு காலி பணி இடங்களுக்கு முன்னுரிமை அளித்து அவை நிரப்பப்படும். தமிழ்நாடு வரலாற்று சிறப்புமிக்க மாநிலம் . இதன் ஆன்மீக சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். புதிய சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும்" என்றார்.
மேலும், "காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி காலத்தில் வேலை வாய்ப்பு, உணவு, கல்வி, தகவல் அறியும் உரிமை சட்டம்" ஆகியவற்றை நிறைவேற்றினோம். ஆனால், பா.ஜ.க தனது வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. எனவே தமிழ்நாடு மக்கள் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்" என்று டி.கே. சிவக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியபோது,
"தேர்தல் அறிக்கை என்பது காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றும். அடுத்த 5 ஆண்டுகளில் எதுபோன்ற விஷயங்களை செயல்படுத்தலாம் என்பது தொடர்பான அறிக்கை தான் இது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளோம். குண்டு-குழி இல்லாத சாலைகள் அமைக்கப்படும். ரேபிஸ் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என்பன உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருப்பதை அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்: