புதன், 8 ஏப்ரல், 2026

"தி.மு.க-வின் தோல்வி கோவையில் தொடங்கிவிட்டது" - விமான நிலையத்தில் அண்ணாமலை அதிரடிப் பேட்டி !!!

SHARE

 "தி.மு.க-வின் தோல்வி கோவையில் தொடங்கி விட்டது" - விமான நிலையத்தில் அண்ணாமலை அதிரடிப் பேட்டி !!!

​"ராகுல் காந்திக்கு ஸ்டாலின் மீது ஆர்வமில்லையா ?" - தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்து அண்ணாமலை கேள்வி !!!

கோவை விமான் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , 

பெண்களுக்கு பாராளுமன்றத்தில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, 3 இல் 1 பங்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் K. Annamalai வலியுறுத்தினார். இதற்கு எதிராக முதல்வர் தற்போது கருத்து தெரிவித்து வருவது குறித்து அவர் விமர்சனம் செய்தார்.

மேலும், நடிகர் கள் பின்னாடி இளைஞர்கள் செல்ல கூடாது என ரஜினி காந்த் தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு நடிகர் Rajinikanth எந்த கோணத்தில் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார் என்பது தெளிவாக தெரியவில்லை என்றும், அவர் ஒரு பெரிய நடிகரும் பண்பாளருமாவார் என்றும் குறிப்பிட்டார்.

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் Senthil Balajiக்கு வெற்றி வாய்ப்பு இல்லை எனவும், திமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பல கட்டங்களை தாண்டி தான் ஏற்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்தார். மேலும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் பணம் மற்றும் பொருட்களுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினார்.

நடிகர் Vijay முன்வைத்த குற்றச்சாட்டுகளும் இதே கோணத்தில் பார்க்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார். இதற்கிடையில், Seeman தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறினார்.

அதே நேரத்தில், Amit Shah அவர்களின் சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும், மூத்த தலைவர்களின் பிரச்சார திட்டங்கள் ஒன்றுக்கொன்று மோதாத வகையில் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட Rahul Gandhi, M. K. Stalin குறித்து குறிப்பிடாமல் பேசியது கவனம் ஈர்த்துள்ளது. இருவரும் ஒரே மாநிலத்தில் இருந்தபோதும் சந்திக்காததும், கோவையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யாததும் அரசியல் வட்டாரத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் திமுக கூட்டணியின் வெற்றி குறித்து அவருக்கு முழுமையான ஆர்வம் இல்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், நடிகர் விஜய் நடத்தும் கூட்டங்களுக்கு அதிகளவில் மக்கள் திரள்வதை முன்னிட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தமிழக அதிகாரிகள் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்களா அல்லது திமுக ஆதிக்கத்தில் உள்ளனரா என்ற கேள்வியும் எழுப்பினார்.

48 மணி நேரத்திற்கு முன்பாக பிரச்சார அனுமதி கோருவது உள்ளிட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட போது வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததை மறுத்து, “நேரடியாக வந்து ஆய்வு செய்து பாருங்கள்” என சவால் விடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: