வெற்றிவேல் வீரவேல் முழக்கத்துடன் கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரம் - தி.மு.க வை வீட்டுக்கு அனுப்ப வீர முழக்கம் !!!
கோவையை அழிக்கவே கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை இறக்குமதி செய்து உள்ளது தி.மு.க - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கடும் தாக்கு !!!
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உறுதி !!!
கோவை கணபதி மாநகர் பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தனது தேர்தல் பிரச்சாரம் பயணத்தை துவங்குகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசியவர்,
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்க போகிறது என்பதில், எந்த மாற்றமும் இல்லை வடக்கு சட்டமன்ற தொகுதி, இந்த தொகுதி உருவான காலத்தில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருப்பதாக தெரிவித்தவர். அந்த வெற்றியை தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் தொடங்க போகிறது எனவும் கூறியவர்,
தீய சக்தி தி.மு.க வை அழித்து ஒழிக்க வேண்டும் என்றால் அதற்கு பலம் பொருந்திய கூட்டணி ஒரே கூட்டணி அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே என்றவர், தீய சக்தி என்ற தி.மு.க கோவையை கெடுப்பதற்கு என்றே கரூரில் இருந்து ஒரு இறக்குமதியை அனுப்பி இருக்கிறார்கள். கொங்கு மண்டலம் எப்பொழுதும் விஷக் கிருமிகளை வளர விடுவதில்லை, கொங்கு மண்டலத்துக்கு என்று தனியாக வரலாறு இருக்கிறது. ஆக கடந்த முறை போலவே, இந்த முறையும் பத்துக்கு, பத்து என்று கொங்கு மண்டல தளபதி எஸ்.பி.வேலுமணியின் தலைமையில் மீண்டும் இந்த மக்கள் அடையாளம் காட்டுவார்கள், நிரூபித்து காட்டுவார்கள் எனக் கூறி பிரச்சாரம் வெற்றிகரமாக தொடங்கு உள்ளதாக தெரிவித்தார். இந்த தேர்தல் பிரச்சார துவக்க விழாவிற்கு வந்து இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்தவர், இந்த பிரச்சாரத்தோட பயணத்தில் திட்டமிட்டு ஒவ்வொரு பகுதி நிர்வாகிகளும் அதிகமான அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இல்லாமல், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஏன் ? தி.மு.க வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் ஏன் ? ஸ்டாலின் அவர்கள் ஆட்சி அழிக்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என பேசினார். குறிப்பாக பெண்களுடைய பாதுகாப்பை, இன்று குழந்தைகள் கையில் புழக்கத்தில் உள்ள போதைப் பொருள் இதைப் பற்றி நாம் முக்கியமாக ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்வோம் என்றவர், உங்களுடைய அத்தனை பேரின் ஆதரவால் வடக்கு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறப் போகிறது என கூறினார்...

0 கருத்துகள்: