"எடப்பாடி மீண்டும் முதல்வராக வானதிக்கு வாக்களியுங்கள்" - கோவையில் சரத்குமார் தேர்தல் பிரச்சாரம் !!!
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகரும் பா.ஜ.க நிர்வாகியுமான நடிகர் சரத்குமார் இன்று கோவையின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை, வடவள்ளி, பி.என்.புதூர், சீரநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்று அவர் வாக்குச் சேகரித்தார்.
அப்பொழுது அவர் பேசும் போது :-
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற எடப்பாடி மீண்டும் முதல்வராக வானதி சீனிவாசன் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் வானதி சீனிவாசன் அவர்கள் உடல்நிலை குறைவால் இருப்பதால் அவரது மகன் ஆதர்ஷ் அவர்கள் என்னுடன் பயணித்து தாய்க்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஐந்து நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன் எங்கு பார்த்தாலும் நல்ல எழுச்சி இருக்கிறது. தெற்கு தொகுதியில் எம்.எல்.ஏ வாக சிறப்பாக செயல்பட்டவர் வானதி சீனிவாசன் பிரச்சனையை போல்டாக பேசக் கூடியவர் தி.மு.க அரசு எதைச் சொன்னாலும் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறது மத்திய அரசு நிதி தரவில்லை என்ற குற்றச்சாட்டாக வைக்கிறார்கள் சரியான திட்டமிடல் இல்லாததால் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் போதை கலாச்சாரம் அதிகரித்து இருப்பதால் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் இந்த ஆட்சியில் அதிக அளவில் நடந்து உள்ளது. தொகுதி மறு சீரமைப்பு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதில் தமிழகம் பாதிக்கப்படும் என்ற பொய்யான தகவலை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள் 39 தொகுதி 50 ஆகமாறலாம் பெண்களுக்கு 33 சதவீதம் தர வேண்டும் என்பதை எதிர்க்கிறார்கள் மகளிருக்கு 33 சதவீதம் என்பது பெண்களுக்கு வலு சேர்க்கின்ற விஷயமாக அமையும், நிதி தரவில்லை என்கிறீர்கள் மத்திய அரசு 11 லட்சம் கோடி நிதி வழங்கு இருக்கிறார்கள் வந்தே பாரத் 16 ரயில் ஓடுகிறது.
விவசாயிகளுக்கு 50 ஆயிரம் பேருக்கு வங்கி கணக்கில் 6000 நிதி உதவி வழங்கப்படுகிறது. தமிழ் கலாச்சாரத்தை, தமிழ் மொழியை எங்கு சென்றாலும் பாரத பிரதமர் அவர்கள் எடுத்துக் கூறுகிறார்.
திருக்குறளை 13 மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள் காசி தமிழ் சங்கமத்தை நடத்தி வருகிறார். இப்படி எண்ணற்ற பெருமைகளை தமிழ் மொழிக்கு வழங்கி இருக்கிறார்கள் எனவே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு உங்கள் வெற்றி வாக்குகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
இவர் அவர் பேசினார்.

0 கருத்துகள்: