வியாழன், 16 ஏப்ரல், 2026

SHARE

 "ஓட்டு ஃபார் தாமரை, ஓட்டு ஃபார் வானதி!" - கோவையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா சூறாவளிப் பிரச்சாரம் !!!

கோவை வடக்கு தொகுதி​வெங்கடாபுரம் முதல் கண்ணப்பன் நகர் வரை 'ரோடு ஷோ': வானதி சீனிவாசனுக்காக வாக்கு சேகரித்த டெல்லி முதல்வர் !!!

 கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று கோவையில் அதிரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

முன்னதாக மருத்துவமனைக்குச் சென்று வானதி சீனிவாசனைச் சந்தித்து நலம் விசாரித்த அவர், மாலையில் தொகுதி முழுவதும் திறந்த வாகனத்தில் வீதி, வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.

​"ஓட்டு ஃபார் தாமரை, ஓட்டு ஃபார் வானதி" (Vote for Lotus, Vote for Vanathi) என்ற முழக்கங்களுடன் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா, கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட முக்கியப் பகுதிகளான:

​அவிலா பள்ளி, வெங்கடாபுரம், கே.கே புதூர், சின்னம்மாள் நகர், எஸ்.பி.ஐ ரோடு, கண்ணப்பன் நகர், நாராயணசாமி லே-அவுட்ஆகிய பகுதிகளில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டார்.

 வழிநெடுகிலும் திரண்டு இருந்த பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க - அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தொண்டர்கள் இடையே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

​டெல்லி முதல்வர் ஒரு வேட்பாளருக்காகக் கோவையின் வீதிகளில் இறங்கிப் பிரச்சாரம் செய்வது, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தொண்டர்கள் இடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 வானதி சீனிவாசன் இல்லாத குறையைத் தீர்க்கும் வகையில், டெல்லி முதல்வர் மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்கள் களத்தில் இறங்கி உள்ளதால் கோவை வடக்குத் தொகுதித் தேர்தல் களம் தற்போது 'தேசிய அளவில்' கவனம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: