வியாழன், 16 ஏப்ரல், 2026

கோவை வடக்கில் 8,000 ரூபாய் கூப்பன் : வார்டு 46-ல் தி.மு.க-வினர் கொடுத்துச் சென்ற வீடியோ - சமூக வலைதளத்தில் வைரல் !!!

SHARE

 கோவை வடக்கில் 8,000 ரூபாய் கூப்பன் : வார்டு 46-ல் தி.மு.க-வினர் கொடுத்துச் சென்ற வீடியோ - சமூக வலைதளத்தில் வைரல் !!!

"வாக்கை விற்காதீர்" : தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா ? என பதிவு !!!

​ கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ள நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க-வினர் 8,000 ரூபாய் மதிப்பிலான 'பரிசு கூப்பன்களை' வீடு, வீடாக விநியோகித்து வருவதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

கோவை, கண்ணப்பன் நகர் அண்ணா நகர் பகுதியில் இன்று பிற்பகல் சுமார் 3:15 மணி அளவில், வார்டு எண் 46-க்கு உட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகச் சமூக வலைதளங்களில் வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்து உள்ளனர்.

 அந்த வீடியோவில், "வெளியூர் ஆட்கள் சிலர் தி.மு.க சார்பில் வீடு, வீடாகச் சென்று 8,000 ரூபாய் மதிப்பு உள்ள பரிசு கூப்பன்களைக் வாக்காளர்களுக்கு கொடுத்து வருவதாகவும், மேலும் அந்த வீடியோவைப் பதிவிட்டு உள்ளனர்.

"எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல" என்ற வாசகத்துடன், பொதுமக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளையும் விடுத்து உள்ளார். 

"உங்கள் பகுதிகளில் இதுபோன்று யாராவது கூப்பன்களோ ? அல்லது பணமோ ? கொடுக்க வந்தால், உடனடியாக அவர்களைப் பொதுமக்கள் உதவியுடன் பிடித்துக் காவல் துறையிடமோ அல்லது தேர்தல் அதிகாரிகளிடமோ ஒப்படையுங்கள்" என அவர் அந்தப் பதிவில் வலியுறுத்தி உள்ளார்.


​ஏற்கனவே, கோவை தெற்கு தொகுதியிலும் இதுபோன்ற 8,000 ரூபாய் கூப்பன்கள் விநியோகிக்கப்படுவதாக அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தார். தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட '8,000 ரூபாய் இல்லத்தரசிகள் கூப்பன்' திட்டத்தை முன்வைத்து, இப்போது தேர்தல் நேரத்தில் ஆசை காட்டி வாக்கு சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: