புதன், 29 ஏப்ரல், 2026

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு !!!

SHARE

 மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு !!!

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (43). இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை (40 வயது) பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதுகுறித்து மாற்றுத்திறனாளி பெண் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அன்பழகன் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி குற்றவாளி அன்பழகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தேன்மொழி தீர்ப்பளித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: