தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததே அ.தி.மு.க ஆட்சியில் தான் : முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு !!!
அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த நிறுவனங்கள் அனைத்தும் வெளிமாநிலங்களுக்கு ஓடி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்து விட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார்.
பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,
"தமிழகத்தில் 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் நிர்வாகமும், நிதி நிலைமையும் சீரழிக்கப்பட்டு கிடந்தது. அதனை கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க அரசு தான் சரி செய்தது. அந்த மோசமான நிதி நிலைமையிலும் தமிழகத்தை 11 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைய செய்தது தான் தி.மு.க அரசின் சாதனை.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியில் தான் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்தது. தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த பல நிறுவனங்கள், அனைத்தும் வெளிமாநிலங்களை தேடி ஓடி விட்டன. தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அ.தி.மு.க ஆட்சியில் தான் அதிகரித்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளிலேயே மகளிர் விடியல் பேருந்துக்கு கையெழுத்து போட்டவன் நான். இப்போது தமிழகத்தை பின்பற்றி மற்ற மாநிலங்களிலும் மகளிருக்கு கட்டணம் இல்லா பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
சொன்னதை செய்வோம்...
2016 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் வயதானவர்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் வழங்கப்படும் என்று அ.தி.மு.க கூறியது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டத்தை அவர்கள் செயல்படுத்தவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் திராணி தி.மு.க விடம் மட்டுமே உள்ளது. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் திட்டம் நிறுத்தம் செய்யப்படும். தமிழை அழிப்பதற்கான மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படும்.
மாநில அரசை மக்கள் தேர்ந்தெடுப்பதை தடுப்பதற்காகவே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டு வர பா.ஜ.க முயற்சிக்கிறது. மேலும், தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தையும், அதிகாரத்தையும் குறைக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தையும் பா.ஜ.க கையில் எடுத்து உள்ளது. இது போன்ற பல்வேறு திட்டங்களை கையில் வைத்து இருக்கும் பா.ஜ.க வின் முயற்சிகளை முறியடிக்கும் அரசாக தி.மு.க அரசு உள்ளது.
தி.மு.க ஆட்சியில் கடலூர் மாவட்டத்தில் கொண்டு வரப்பட்ட இடங்களை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார். அவை பின்வருமாறு:
சிதம்பரம் புதிய பேருந்து நிலையம், சுற்றுலா மைய மேம்பாட்டு பணிகள், கெடிலம் ஆற்றுக்கு மேல் உயிர் உயர்மட்ட பாலம்,
சிதம்பரம் கூட்டு குடிநீர் திட்டம், அரிவாள் மூக்கு பகுதியில் வெள்ள நீர் கடலில் கலப்பதை தடுக்க புதிய கால்வாய்,
குறிஞ்சிப்பாடியில் பெருமாள் ஏரி தூர்வாரம் பணி, திட்டக்குடியில் புதிய கால்நடை தீவன ஆலை...

0 கருத்துகள்: