திங்கள், 20 ஏப்ரல், 2026

கோவை ராமநாதபுரம் காவல் நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்ட தி.மு.க , அ.தி.மு.க கட்சியினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர் !!!

SHARE

கோவை ராமநாதபுரம் காவல் நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்ட தி.மு.க , அ.தி.மு.க கட்சியினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர் !!!

கோவை, ராமநாதபுரம் 80 அடி சாலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக தி.மு.க வினரை பிடித்து அ.தி.மு.க வினர் தாக்கினர். மேலும் தி.மு.க வினர் வந்த கார் கண்ணாடியையும் அடித்து உடைத்தனர். சம்பவ இடத்திற்கு அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வந்த நிலையில், கரூரை சேர்ந்த தி.மு.க வினர் வந்த வாகனத்தில் இருந்து சுமார் ஒரு லட்ச ரூபாய் வரையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 இதனை அடுத்து பணத்துடன் தி.மு.க வினர் 6 பேரை போலீசார் விசாரணைக்காக இராமநாதபுரம் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இரவு நேரத்தில் இராமநாதபுரம் காவல் நிலையத்தை அ.தி.மு.க வினர் முற்றுகையிட்ட நிலையில் , தி.மு.க வை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும் காவல் நிலையம் முன்பாக குவிந்தனர்.

இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் வாக்கு வாதம் செய்த நிலையில் காவல் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

காவல் நிலைய வாயிலில் இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்படவே போலீசார் லேசான தடியடி நடந்தி இரு தரப்பினரையும் கலைத்தனர். 


தொடர்ந்து இராமநாதபுரம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: