செல்போன் கடையில் 1 லட்சம் திருடிய ஊழியர் - போலீசார் விசாரணை !!!
கோவை, குனியமுத்தூர் அருகே உள்ள காவேரி நகரை சேர்ந்தவர் மாதவன் (வயது 56). இவர் சராமேடு, காவேரி நகர் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த முகமது யாசின் (வயது 33) என்பவர் சில நாட்களுக்கு முன்பு வேலையில் சேர்ந்து உள்ளார்.
இந்த நிலையில் மாதவன் வங்கியில் செலுத்துவதற்காக 1 லட்சத்து 5 ஆயரம் பணத்தை கடையில் வைத்து இருந்தார். அதை பார்த்த முகமது யாசின் பணத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இது கறித்து மாதவன் கரும்புக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது யாசினை தேடி வருகிறார்கள்.

0 கருத்துகள்: