புதன், 13 மே, 2026

கோவையில் 2 பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபர்கள் - போலீசார் விசாரணை !!!

SHARE

 கோவையில் 2 பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபர்கள் - போலீசார் விசாரணை !!!

கோவை, போத்தனூர் அருகே உள்ள கார்மல் நகர் தேவசையா நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி சாந்தி (வயது 60). இவர்கள் வீட்டு அருகில் நோட்டு பேனா விற்கும் கடை நடத்தி வருகிறார்கள். 

சம்பவத்தன்று சாந்தி கடையில் இருந்த போது ஒரு வாலிபர் வந்தார். கடையில் பேனா பென்சில் வாங்குவது போல் நடித்து சாந்தி அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை. பறிக்க முயன்றார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி தங்க சங்கிலியை பறிக்க விடாமல் தடுக்க போராடினார். இதில் தங்கச் சங்கிலி 2 துண்டாக அருந்து உள்ளது. 

உடனே அந்த வாலிபர் கையில் கிடைத்த 2 பவுன் தங்க சங்கிலி உடன் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். 

இது குறித்து சாந்தி சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் கருப்பு சட்டை மற்றும் பேண்ட் ஊதா நிற ஹெல்மெட் அணிந்து வந்து உள்ளார். அவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

அதே போன்று பீளமேடு அருகே உள்ள கிரி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி நித்யா ( வயது 38) என்பவர் அங்கு உள்ள தரங்கம்பன் கோவில் தெரு  பகுதியில் நடந்து சென்ற போது, அங்கு திடீரென்று வந்த வாலிபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2/1/2 உன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். 

இந்த சம்பவம் குறித்து நித்தியா பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: