வெள்ளி, 15 மே, 2026

தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு !!!

SHARE

 தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு !!!

தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகத்தில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு அமைந்த பிறகு தொடர்ந்து ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், உளவுத்துறை டி.ஜி.பி யாக பணி புரிந்து வந்த பாலநாக தேவி, சைபர் கிரைம் டி.ஜி.பி யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், வேலூர் சரக டி.ஐ.ஜி யாக பணி புரிந்து வந்த தர்மராஜன், பாதுகாப்பு உளவுப் பிரிவு டி.ஐ.ஜி யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை காவல் துறையின் தெற்கு இணை ஆணையராக பணி புரிந்து வந்த பகர்லா செபாஸ் கல்யாண், உளவுப் பிரிவு உள்பாதுகாப்பு டி.ஐ.ஜி யாக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி யாக பணி புரிந்து வந்த சரவணன், சென்னை சி.ஐ.டி உளவுத்துறை டி.ஐ.ஜி யாக மாற்றப்பட்டு உள்ளார்.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணி புரிந்து வந்த கராட் கரூண் உத்தவராவ், சென்னை குற்றவியல் உளவுத் துறை பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணி புரிந்து வந்த மயில்வாகனன், சென்னை சிறப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக பணி புரிந்து வந்த மதன், சென்னை பாதுகாப்பு பிரிவு குற்றபுலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை குற்ற புலனாய்வுத் துறை கியூ பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணி புரிந்து வந்த சண்முகம், சென்னை சிறப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை மெட்ரோ மண்டல குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணி புரிந்து வந்த மாதவன், சென்னை பாதுகாப்பு பிரிவு குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு அரசின் இந்த அதிரடி மாற்றங்கள் தமிழக காவல் துறையின் உளவுத்துறை, பாதுகாப்பு மற்றும் சைபர் குற்ற பிரிவுகளை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு காவல் துறையில் காத்து இருப்போர் பட்டியலில் இருந்த டி.ஜி.பி டேவிட்சன் தேவசீர்வாதம் உள்ளிட்ட 3 பேருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

அதன்படி, காத்து இருப்போர் பட்டியலில் இருந்த டி.ஜி.பி டேவிட்சன் தேவசீர்வாதம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் கண்காணிப்பு டி.ஜி.பி யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

காத்து இருப்போர் பட்டியலில் இருந்த செந்தில் வேலன், சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் ஐ.ஜி யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக பணி புரிந்து வந்த ராஜீவ் குமார், சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் துறை பயிற்சி பள்ளி டி.ஜி.பி யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: