புதன், 13 மே, 2026

கோவையில் தனியார் வங்கி ஊழியர் மீது தாக்குதல் ; 2 பேர் கைது !!!

SHARE

 கோவையில் தனியார் வங்கி ஊழியர் மீது தாக்குதல் ;  2 பேர் கைது !!!

கோவை, கவுண்டம்பாளையம் அருகே உள்ள ராஜன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் செந்தில்குமார் ( வயது 36). இவர் தனியார் வங்கியில் பணம் வசூலிக்கும் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். 

செந்தில்குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் சில பிரச்சனைகளால் கடந்த 4 மாதங்களாக அவரது மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார்.

இந்நிலையில் செந்தில்குமார் வீட்டில் அருகில் ராஜலட்சுமி என்ற பெண் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடிவந்து உள்ளார். அப்போது செந்தில் குமாருக்கும, ராஜலட்சுமிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார் வீட்டில் இருந்தார். அப்போது கவுண்டம்பாளையம் ராஜன் நகரை சேர்ந்த பஷீர் (வயது 36) மற்றும் அவரது நண்பர்கள் ரபிக்(44), காமில் ஆகியோர் வந்து வந்தனர். 

அப்போது பஷீர் செந்தில்குமார் இடம் ராஜலட்சுமி இடம் பேசுவது குறித்தும் அவரது செல்போனை வாங்கியது குறித்தும் தட்டி கேட்டு உள்ளார். இதில் செந்தில் கமாரை பஷீர் மற்றும் ரபீக் தாக்கியுள்ளனர்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். காயம் அடைந்த செந்தில்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து செந்தில் குமார் கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

தொடர்ந்து பஷீர் மற்றும் ரபீக் ஆகியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். காமில் போலீஸ் நிலையம்ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: