ஞாயிறு, 24 மே, 2026

சேரில் அமர்ந்து கொண்டே இப்படியா ?" - கோவை பெரிய கடை வீதி நகைக் கடையில் சேலைக்குள் 40 கிராம் வெள்ளி கொலுசை சொருகிய பெண் !!!*

SHARE

 சேரில் அமர்ந்து கொண்டே இப்படியா ?" - கோவை பெரிய கடை வீதி நகைக் கடையில் சேலைக்குள் 40 கிராம் வெள்ளி கொலுசை சொருகிய பெண் !!!

​'கஸ்டமர்' போல் வந்து நைசாகக் கைவரிசை காட்டிய பெண்மணி... வைரலாகும் சி.சி.டி.வி காட்சிகள் !!!

 கோவை மாநகரின் மிக முக்கிய வர்த்தக மையமான பெரிய கடை வீதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர் போல நைசாக நுழைந்து சேரில் அமர்ந்து கொண்டே கண்ணிமைக்கும் நேரத்தில் 40 கிராம் வெள்ளி கொலுசைத் தனது சேலைக்குள் சொருகித் திருடிச் சென்ற பெண்ணின் அதிர்ச்சிச் சம்பவம் தற்பொழுது சி.சி.டி.வி (CCTV) காட்சிகளின் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள இந்த திருட்டுச் சம்பவத்தின் "லைவ்" வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் பரவி வருகிறது.

​கோவை பெரிய கடை வீதி பகுதியில் "பிரண்ட்ஸ் ஜுவல்லரி" (Friends Jewellery) என்ற நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகைக் கடைக்கு, 'கஸ்டமர்' போல் ஒரு பெண்மணி கடைக்குள் நுழைந்து, அங்கு இருந்த சேரில் அமர்ந்து உள்ளார்.

 கடையில் இருந்த ஊழியர்களிடம் தனக்கு வெள்ளி கொலுசு வேண்டும் என்று கேட்டு, அங்கு வைக்கப்பட்டு இருந்த பல்வேறு டிசைன்களை அவர் பார்த்து உள்ளார்.

​ஊழியர்கள் அந்தப் பெண்ணிற்குப் பல மாடல்களை எடுத்துக் காண்பித்துக் கொண்டு இருந்த வேளையில், அவர்களின் கவனத்தை திசை திருப்பிய அந்தப் பெண், சேரில் அமர்ந்து கொண்டே அதில் இருந்த சுமார் 40 கிராம் எடை உள்ள ஒரு ஜோடி வெள்ளி கொலுசை மிகவும் சாதுரியமாகத் தனது கைகளுக்குள் மறைத்து, நைசாகத் தனது சேலைக்குள் சொருகி "எஸ்கேப்" செய்து உள்ளார்.

 அந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: