ஞாயிறு, 31 மே, 2026

எங்கள் தலைவா தலைமை ஏற்க வா...!" - ஜூன் 4 அண்ணாமலை பிறந்தநாள் : கோவையில் போஸ்டர் அடித்து ஆதரவாளர்கள் அதிரடி அழைப்பு !!!

SHARE

 எங்கள் தலைவா தலைமை ஏற்க வா...!" - ஜூன் 4 அண்ணாமலை பிறந்தநாள் : கோவையில் போஸ்டர் அடித்து ஆதரவாளர்கள் அதிரடி அழைப்பு !!!

 தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் கஅண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, "எங்கள் தலைவா தலைமை ஏற்க வா...!" என்ற அதிரடி வாசகங்களுடன் கோவையின் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் ஒட்டப்பட்டு உள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

​தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாள் வருகிற ஜூன் மாதம் 4-ஆம் தேதி (04.06.2026) கொண்டாடப்பட உள்ளது.

 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு அண்ணாமலையின் இந்த ஆண்டு பிறந்தநாளைக் கோவையில் உள்ள அவரது ஆதரவாளர்களும், பா.ஜ.க தொண்டர்களும் மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டா தயாராகி வருகின்றனர்.

​இதன் ஒரு பகுதியாக, பா.ஜ.க-வின் முன்னாள் கோவை மாநகர் தலைவரான உத்தம பாலாஜி ராமசாமி, தனது "உத்தம் பவுண்டேஷன்" (Uthama Foundation) அமைப்பின் சார்பில் கோவை மாநகர் முழுவதும் அண்ணாமலையை வாழ்த்திப் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டி உள்ளார். 

சிங்காநல்லூர், அவிநாசி சாலை, உள்ளிட்ட மாநகரின் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது அதில், "எங்கள் தலைவா தலைமை ஏற்க வா....!" என்ற கம்பீரமான வாசகங்கள் அச்சிடப்பட்டு, அண்ணாமலையின் பிரம்மாண்ட படங்களுடன் ஒட்டப்பட்டு உள்ளது.

 "தமிழக அரசியலில் அண்ணாமலை மீண்டும் முழு வீச்சில் தனது தலைமைப் பொறுப்பை ஏற்று வழி நடத்த வேண்டும்" என்ற தொண்டர்களின் நீண்ட நாள் ஆதங்கத்தையும், எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த வாசகங்கள் அமைந்து உள்ளதாகப் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

​கோவை நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டது முதலே கோவை மாவட்ட தொண்டர்களுக்கும் அவருக்குமான பிணைப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது. இந்நிலையில், ஜூன் 4-ஆம் தேதி அவரது பிறந்தநாளை ஒட்டி கோவையில் ஒட்டப்பட்டு உள்ள இந்த "தலைமை ஏற்க வா" போஸ்டர்கள், சமூக வலைதளங்களிலும் அண்ணாமலையின் ஐ.டி விங் (IT Wing) மூலமாக "டிரெண்டிங்" ஆக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: