ஞாயிறு, 31 மே, 2026

கோவையில் 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது கோவை மத்திய சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்திய 5 சிறை கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

SHARE

 கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது கோவை மத்திய சிறை வளாகத்தில் தாக்குதல் ;  5 சிறை கைதிகள் மீது வழக்கு பதிவு - மூன்று கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம் !!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் கடந்த 22 ம் தேதி 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். கார்த்திக் காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்ற போது வலது கை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த நிலையில் கடத்த வியாழக்கிழமை கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கோவை மத்திய சிறையில் கார்த்திக் அடைக்கபட்டார்.

இந்நிலையில் கோவை சிறையில் குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் கைதி கார்த்திக் நெற்றியில் தையல் போடப்பட்டு இருப்பதுடன், உடலில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு உள்ளது. காயம் அடைந்த கார்த்திக் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சிறை வார்டன் அளித்த புகாரின் பேரில் சிறை கைதிகள் நந்து (எ) நவீன் குமார் , ஜீவா (எ) ஜீவானந்தம், மகாவீர் (எ) மகாதேவன், கணேஷ், விஸ்வநாதன் ஆகிய ஐந்து சிறை கைதிகள் மீது 5 பிரிவுகளில் பந்தய சாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் 3 சிறை கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

நவீன்குமார் வேலூர் மத்திய சிறைக்கும், ஜீவானந்தம் கடலூர் மத்திய சிறைக்கும், மகாதேவன் திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.


 இது தொடர்பாக கோவை பந்தய சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: