வெள்ளி, 29 மே, 2026

அண்ணாமலையும் தானும் ஒரே கல்லூரியில் பயின்றோம், அரசியலுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை வைத்து அரசியல் செய்வதா ? ; உள்ளாட்சித் தேர்தலில் போட்டியாக வந்து விடுவேன் என்று மலிவான அரசியல் செய்கிறார் கவுன்சிலர் காயத்ரி - பதிலடி கொடுத்து குற்றம் சாட்டிய ஸ்ரீநிதி !!!

SHARE

 “அண்ணாமலையும் நானும் ஒரே கல்லூரியில் பயின்றோம், அரசியலுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை வைத்து அரசியல் செய்வதா ? ;  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியாக வந்து விடுவேன் என்று மலிவான அரசியல் செய்கிறார் கவுன்சிலர் காயத்ரி - பதிலடி கொடுத்து குற்றம் சாட்டிய ஸ்ரீநிதி !!!

கோவையில் காங்கிரஸ் கட்சி பெண் நிர்வாகிகள் கருத்து வேறுபாடு ; வேட்பாளராக போட்டியிட்ட ஸ்ரீநிதி பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் சீட்டு கேட்டதாக செயல் தலைவர் காயத்ரி குற்றச்சாட்டு - மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்த இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஸ்ரீநிதி...


காங்கிரஸ் கட்சியில் கோவையில் வேட்பாளராக போட்டியிட்ட ஸ்ரீநிதி கட்சியில் இருந்து விலகியதாக காங்கிரஸ் செயல் தலைவர் காயத்திரி கூறிய நிலையில் வேட்பாளர் ஸ்ரீநிதி அதனை மறுத்து உள்ளார். மேலும் எம்.பி ஜோதிமணியின் பதிவுக்கு ஸ்ரீநிதி பதில் அளித்து உள்ளதும், அதற்கு காயத்திரி கண்டனம் தெரிவித்து உள்ளதும் அக்கட்சியில் பெண் நிர்வாகிகளுக்குள் மீண்டும் கருத்து வேறுபாடு துவங்கி இருப்பதை உணர்த்துகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஸ்ரீநிதி போட்டியிட்டார். 

இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் காயத்ரி தெரிவித்து உள்ளார். மேலும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை ஸ்ரீநிதி விமர்சித்தது கண்டனத்திற்கு உரியது என்றும் ஆவேசம் கொண்டார்.

இது குறித்து காயத்ரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

 ஸ்ரீநிதிக்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் சீட்டு வழங்கப்பட்டது அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வந்தவர் பா.ஜ.கவில் சீட்டு கேட்டு அண்ணாமலையிடம் வாய்ப்பு கேட்ட போது அது மறுக்கப்பட்டது என்றும் அதற்கு பின் தான் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார் ஆனால் அதையெல்லாம் தலைமையில் மறைத்து சீட்டு வாங்கினார் என்றார். உழைத்து ஓட்டு வாங்க யோகிதை இல்லாமல் அடுத்த கட்சிக்கு தாவுகிறார் என்றும் குற்றம் சாட்டினார். 

இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்த சிங்காநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட வேட்பாளரும், இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஸ்ரீநிதி கூறும்போது ;

நான் சிங்காநல்லூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இருந்ததாகவும், இளைஞர் அணி தேசிய செயலாளராகவும் உள்ளதாக கூறியவர், இது தவறான கருத்தை அவர் கூறுவதாகவும், அதற்கு நாளை கட்சியில் இருந்து கண்டனம் தெரிவிப்பார்கள் என்றவர், நான் கட்சியில் இருந்து விலகவே இல்லை என்றும், அண்ணாமலை பெயரை எதற்கு கூறினார்கள் ? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பியவர், அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம் அண்ணாமலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும், தான் இருப்பது காங்கிரஸ் கட்சி, அவர் பெயரை ஏன் ? இழுக்க வேண்டும் இவர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

எங்கேயுமே நான் அண்ணாமலைக்கு கட்சியில் இருந்ததோ, அவர்கள் கட்சியில் உறுப்பினராகவும், நிர்வாகியாகவும் பா.ஜ.கவில் இருந்தது கிடையாது என்றும், நாங்கள் ஒரே கல்லூரியில் படித்தோம் அதற்காக இப்படி பேசலாமா ? என்று கேள்வி எழுப்பியவர், அண்ணாமலைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றார்.
SHARE

Author: verified_user

0 கருத்துகள்: