"இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும்" ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட பிறகும் உதயநிதி ஸ்டாலின் திருந்தவில்லை ; மக்கள் பாடம் புகட்டுவார்கள் - வானதி சீனிவாசன் ‘கடும்’ கண்டனம் !!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகர் அவர்களை வாழ்த்தி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "மக்களைப் பிரிக்கும் சனாதனத்தை அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும்" என பேசி உள்ளார்.
சனாதன தர்மம் அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உதயநிதி ஸ்டாலினின், தி.மு.க வின் கொள்கை என்றால், அதை தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஏன் குறிப்பிடவில்லை ? தேர்தல் பிரசாரத்தில் சனாதன தர்மத்தை இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் ஏன் பேசவில்லை ?
தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளில், "நாங்கள் இந்துக்களுக்கு விரோதி அல்ல" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஆட்சியின் இறுதி மூச்சு வரை இந்து தர்மத்தை பழிப்பதை தி.மு.க வழக்கமாகக் கொண்டு இருந்தது. அதனால் தான், கடைசி நாளில், "நாங்கள் இந்துக்களுக்கு விரோதி அல்ல" என ஸ்டாலின் சொன்னதை மக்கள் நம்பவில்லை.
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து உள்ளதால், சிறுபான்மையினரின் வாக்குகள் இனி தி.மு.க வுக்கு கிடைக்காது என்ற பேசப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் ஓட்டுகள் இல்லை என்றால் தி.மு.க என்பது ஜீரோ தான்.
அதனால் தான், "நாங்கள் எப்போதும் இந்து விரோதி தான்" என்பதை, எதிர்க்கட்சித் தலைவரானதும் முதல் உரையிலேயே உதயநிதி பேசி உள்ளார். தமிழக மக்கள் இந்த வேடதாரிகளை புரிந்து கொண்டு தான், ஆட்சியில் இருந்து விரட்டி அடித்துள்ளனர். அப்படியும் இவர்கள் திருந்தவில்லை. அதனால் மக்கள் திருத்துவார்கள். அதற்கான காலம் விரைவில் வரும்.


0 கருத்துகள்: