சீட்டு விவகாரத்தில் கோவையில் காங்கிரஸ் கோஷ்டி பூசல் வெடித்தது; “அண்ணாமலையிடம் சீட் கேட்டவர் ஸ்ரீநிதி - காங்கிரஸ் செயல் தலைவர் காயத்ரி தாக்கு !!!
எம்.பி ஜோதிமணியின் ‘முறைகேடு’ பதிவுக்கு வேட்பாளர் ஸ்ரீநிதி பதிலடி: “ராகுல் காந்தி, கார்கேவை கேள்வி கேட்காதீங்க!” என மோதல் !!!
காங்கிரஸ் கட்சியில் கோவையில் வேட்பாளராக போட்டியிட்ட ஸ்ரீநிதி கட்சியில் இருந்து விலகியதாக காங்கிரஸ் செயல் தலைவர் காயத்திரி கூறிய நிலையில் வேட்பாளர் ஸ்ரீநிதி அதனை மறுத்து உள்ளார். மேலும் எம்.பி ஜோதிமணியின் பதிவுக்கு ஸ்ரீநிதி பதில் அளித்து உள்ளதும், அதற்கு காயத்திரி கண்டனம் தெரிவித்து உள்ளதும் அக்கட்சியில் பெண் நிர்வாகிகளுக்குள் மீண்டும் கருத்து வேறுபாடு துவங்கி இருப்பதை உணர்த்துகிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஸ்ரீநிதி போட்டியிட்டார்.
இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் காயத்ரி தெரிவித்து உள்ளார். மேலும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை ஸ்ரீநிதி விமர்சித்தது கண்டனத்திற்கு உரியது என்றும் ஆவேசம் கொண்டார்.
இது குறித்து காயத்ரி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,
ஸ்ரீநிதிக்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் சீட்டு வழங்கப்பட்டது. அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வந்தவர் பா.ஜ.க வில் சீட்டு கேட்டு அண்ணாமலையிடம் வாய்ப்பு கேட்டபோது அது மறுக்கப்பட்டது என்றும் அதற்கு பின் தான் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார் ஆனால் அதையெல்லாம் தலைமையில் மறைத்து சீட்டு வாங்கினார் என்றார். உழைத்து ஓட்டு வாங்க யோகிதை இல்லாமல் அடுத்த கட்சிக்கு தாவுகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
ஜோதிமணியை விமர்சிப்பதற்கு ஸ்ரீநிதிக்கு கடுகளவு கூட தகுதி இல்லை என்றும் கட்சிக்காக வேலை செய்ய வந்தவர்களை ஸ்ரீநிதி அவமதித்ததாகவும்ர் கே சி வேணுகோபால் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பொழுதும் ஸ்ரீநிதி அவமானப்படுத்தினார் என்றார். காங்கிரஸ் கட்சி மேலிடம் உடனடியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தி.மு.கவிடம் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தாமல் தவெகவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது தொடர்பாக தி.மு.க வினர் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வருவது தொடர்பான கேள்விக்கு நாங்கள் யார் முதுகிலும் குத்தவில்லை அன்று என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும் தி.மு.க அரசு, அ.தி.மு.க, பா.ஜ.க இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது தான் ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுனா கார்கேவால் பேசி அந்த முடிவு எடுக்கப்பட்டது . தி.மு.க வும் காங்கிரசும் எப்பொழுதும் தாயும் பிள்ளையும் ஆக சகோதரத்துவத்துடன் தான் இருக்கிறது என்றார்.
தமிழக முதல்வர் விஜய் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டு ஜெயித்துக் காண்பித்து உள்ளர். நம்பிக்கை என்ற ஒரு வார்த்தைக்கு அழகையும் அர்த்தத்தையும் சேர்த்தவர் நம்முடைய முதல்வர் விஜய் என்று கூறினார். மேலும் ஸ்ரீநிதி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மேலிடத்தில் பேசப்படும் என்று தெரிவித்தார்.
எம்.பி ஜோதிமணி எக்ஸ் தள பதிவு- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு செயல்முறையில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது.
ஸ்ரீநிதி ஜோதிமணி பதிவுக்கு அளித்த பதில்- வேட்பாளர்கள் ஒரே ஒருவரால் தேர்ந்தெடுக்கப்படவில்லை மல்லிகார்ஜுனா கார்கே அவரால் அமைக்கப்பட்ட குழுவின் மூலம் பட்டியல் இறுதியில் செய்யப்பட்டு ராகுல் காந்தி கேசி வேணுகோபால் மற்றும் பரிசீலனை உறுப்பினர்கள் மற்றும் மூத்த நாடாளுமன்ற தலைவர்களால் அங்கீகரிக்க பட்டது. அப்படி இருக்கும் பொழுது இதுபோன்று பகிரங்கமாக தெரிவிப்பது ஒட்டுமொத்த தலைமையின் முடிவு எடுக்கும் திறனை மறைமுகமாக கேள்விக்கு உட்படுத்துவது. பிரச்சாரங்களின் பொழுது மூத்த தலைவர்களின் ஆதரவு இல்லாமலேயே தலைமை எங்களைப் போன்ற இளைஞர்களை ஊக்குதேர்ந்தெடுத்த பொழுது நாங்கள் கட்சி ஒழுக்கத்தை மதித்தோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

0 கருத்துகள்: