திங்கள், 18 மே, 2026

தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது கட்சிக்காரர்களுக்கும்,தொண்டர்கள் மற்றும் மக்கள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை !!!

SHARE

 தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது கட்சிக்காரர்களுக்கும்,தொண்டர்கள் மற்றும் மக்கள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை !!!

தி.மு.க வில் அணுகுமுறை கிடைக்கவில்லை தலைமை செயல் குழு உறுப்பினர் கூட ஒரு மந்திரியை கூட அணுகாத நிலை தான் தி.மு.க வில் இருந்தது அதற்கு தி.மு.க நன்றாக அனுபவிக்கும்...

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலின் போது டி.ஆர் சண்முகத்திற்கு தி.மு.க வில் சீட் வழங்காத நிலையில் சுயேட்சையாக நின்றார். அதன் பின்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் தமிழக வெற்றிக்க் கழகத்தில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய த.வெ.க நிர்வாகி டி.ஆர் சண்முகசுந்தரம்:-

தி.மு.க வில் இருக்கின்ற காலத்தில் நல்ல வேலை செய்பவர்களை விட்டு விட்டு இனி என்ன செய்வார்கள் என்றும் எங்களைப் போல மக்களுக்காக தொகுதியில் கழகம் பணியாற்றினோம் நல்ல செய்தவர்களை விட்டு விட்டு தற்பொழுது ஆய்வு செய்து என்ன பலன் என தி.மு.க வை விமர்சனம் செய்தார்.

த.வெ.க வில் எந்த பதவி கொடுத்தாலும் மனப் பூர்வமாக வாங்கிக் கொள்வதாக தெரிவித்தார்.

தி.மு.க வில் சீட்டு வழங்காததால் சுயேட்சையாக வெற்றி பெற எண்ணினேன் தி.மு.க வில் உழைத்தவர்களுக்கும், நேர்மையானவர்களை கண்டறிய முடியவில்லை மேலும் இனி தி.மு.க எப்படி இருக்கும் என்று சொல்ல முடியவில்லை 

தமிழக வெற்றி கழகவும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கும் என்றும் அந்த சமயத்தில் தவெகவில் சேர முடியவில்லை என்றும் சிறு வயதில் இருந்து விஜய் ரசிகர் இருந்தால் கூட ஆனால் தி.மு.க வில் இருந்தேன் தி.மு.க நல்லவர்களை கைவிட்டது. இனி எந்த அளவிற்கு நல்லது செய்வார்கள் என்று கூற முடியாது.

தி.மு.க வில் கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் எனக்கு சீட்டு வழங்கி இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்று இருப்பேன் என்றும் 10 ஆண்டு காலமாக தி.மு.க வில் இருந்து அரசியல் வாழ்க்கை வீணாகி விட்டது. தற்பொழுது தி.மு.க வில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து இருப்பது புத்துணர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

நானும் சிறு வயது முதல் நேர்மையாக களப்பணியாற்றி வருகிறேன். ஆனால் தற்போது அந்த பணியை தவெக மேற்கொள்ளப் போவதாக கூறினார்.

தி.மு.க வில் அணுகுமுறை கிடைக்கவில்லை தலைமை செயல் குழு உறுப்பினர் கூட ஒரு மந்திரியை கூட அணுகாத நிலை தான் தி.மு.க வில் இருந்தது அதற்கு தி.மு.க நன்றாக அனுபவிக்கும் என தெவித்தார். 

தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது கட்சிக்காரர்களுக்கும்,தொண்டர்கள் மற்றும் மக்கள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை 

மேட்டுப்பாளையம் தொகுதி தி.மு.க வேட்பாளர் யார் ? என்று தெரியவில்லை கடந்த முறை ஒரு லட்சத்து 3 ஆயிரம் வாக்குகள் பெற்ற வந்தேன். தி.மு.க வளர்ச்சிக்காக நான் பணியாற்றினேன் ஆனால் என்னை கண்டு கொள்ளவில்லை 

மேட்டுப்பாளையம் தொகுதி பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. இது குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின், அமைச்சரிடம் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை தற்போது தமிழக வெற்றி கழகம் அதற்கு தீர்வளிக்கும் என்று தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: