குடியிருப்புக்குள் புகுந்த ‘கொடிய’ கட்டுவிரியன் பாம்பு ; 'உயிர்க் கொல்லி’ நச்சுப் பாம்பைக் கண்டு உறைந்து போன மக்கள் - பாம்பு பிடி வீரர் திறமாக மீட்டு நடவடிக்கை !!!
கோவை, மலுமிச்சம்பட்டி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த அதீத நச்சுத்தன்மை வாய்ந்த ‘கட்டுவிரியன்’ பாம்பை வனவிலங்கு மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
கோவை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாகப் பருவ நிலை மாற்றம் காரணமாக வனவிலங்குகள் மற்றும் ஊர்வனவற்றின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று அந்தப் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்குள், இந்தியாவின் மிக ஆபத்தான நச்சுப் பாம்புகளில் ஒன்றான ‘கட்டுவிரியன் பாம்பு’ (Common Krait) ஒன்று வழிதவறி நுழைந்து உள்ளது.
வீட்டின் அருகே பயங்கர நச்சுப் பாம்பு நடமாடுவதைக் கண்டு அங்கு இருந்த குடும்பத்தினார் அதிர்ச்சி அடைந்த அலறி அடித்து ஓடினர்.
இது குறித்து உடனடியாக ‘டபிள்யூஎன்சிடி’ (WNCT) வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த டபிள்யூஎன்சிடி குழுவைச் சேர்ந்த மீட்பு வல்லுநர்கள் மோகன் மற்றும் மோனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்குப் பதுங்கி இருந்த கட்டுவிரியன் பாம்பை எவ்வித காயமும் இன்றி, மிக பத்திரமாகவும் மீட்டனர்.
மீட்கப்பட்ட பாம்பு பின்னர் வனத்துறையினரின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பான அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் விடப்பட்டது.
"குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் அல்லது இதர வன உயிரினங்கள் தென்பட்டால், பொதுமக்கள் யாரும் தாங்களாகவே முன்வந்து அவற்றை அடிக்கவோ, துன்புறுத்தவோ அல்லது காயப்படுத்தவோ முயற்சிக்க வேண்டாம். அது சட்டப்படி குற்றமாகும். மேலும், கட்டுவிரியன் போன்ற நச்சுப் பாம்புகள் தாக்கினால் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே, உடனடியாக எங்களைப் போன்ற மீட்புக் குழுவினரையோ அல்லது வனத்துறையினரையோ தொடர்புகொள்ளுங்கள்" என அறிவுறுத்தி சென்றனர்.

0 கருத்துகள்: