வெள்ளி, 15 மே, 2026

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்கள் அறிமுகப்படுத்த முடிவு !!!

SHARE

 கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்கள் அறிமுகப்படுத்த முடிவு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தொழில் நுட்பம் சார்ந்த பாடங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலையில் 40 துறைகள் உள்ளன. பல்கலைக் கழகத்தின் கீழ் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் உட்பட 147 இணைப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பல்வேறு பாடங்கள் வழங்கப்படுகின்றன.

மாணவர்கள் உலகளாவிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப திறன்களை பெறும் வகையில் சிறப்பு கல்வி ஆராய்ச்சி மற்றும் தொழில் சார்ந்த கல்வி ஆகியவற்றில் பல்கலைக் கழகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது. ஏற்கனவே பல்வேறு பாடப் பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவு பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அக்னி டெக் (ஏ.ஐ), ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏ ஆர்) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களும் பாடங்களில் இணைக்கப்படுகின்றன.

இந்த புதிய தொழில் நுட்பங்கள் பல்கலைக் கழகத்தின் மேலாண்மை வணிகவியல், கணினி பயன்பாடுகள் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கொண்டு வரப்படுகிறது. மேலும் பல்துறை சார்ந்த களகங்களிலும் பயன்படும் என பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் டிஜிட்டல் மற்றும் மாற்றம் அறிவார்ந்த அமைப்புகள், வணிக பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட கணினி துறைகளில் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு தயாராகும் வகையில் பயிற்சி பெறுவார்கள். இது தவிர புத்தகம், தொழில் முனைவு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளின் வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் உயர்கல்வி தரத்தை மேம்படுத்த உலகளாவிய கல்வி மற்றும் தொழில்துறை போக்குகளுக்கு ஏற்ப மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மேம்பட்ட தொழில் நுட்பத்திரங்களுடன் உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என பாரதியார் பல்கலைக் கழகம் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: