வெள்ளி, 15 மே, 2026

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; முதல்வர் விஜய் உத்தரவு !!!

SHARE

 தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; முதல்வர் விஜய் உத்தரவு !!!

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஜனவரி 1, 2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்குவதாக தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், "திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதலமைச்சர் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி உள்ளார்.

இதனால் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்ந்து 60 சதவீதமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

அகவிலைப்படி உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 1,230 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஜனவரி 01, 2026 முதல் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாநில அரசும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: