வியாழன், 21 மே, 2026

ரீல்ஸ்’ உலகில் இருந்து ‘ரியல்’ உலகிற்கு வாருங்கள்: தமிழக அரசின் டெண்டர் முறைகேடு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் தாக்கு !!!

SHARE

 ரீல்ஸ்’ உலகில் இருந்து ‘ரியல்’ உலகிற்கு வாருங்கள்: தமிழக அரசின் டெண்டர் முறைகேடு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் தாக்கு !!!

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 

பி எம் ஸ்ரீ திட்ட விவகாரத்தில் எனது கண்டனத்தை நேற்றே சொல்லிவிட்டேன் எனவும், தமிரக கல்வி அமைச்சர் ராஜ்மோகன் இது எங்கள் கொள்கை திட்டம் , இதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று சொல்கிறார் எனவும், இது அரசியல் கிடையாது, இது குழந்தைகளின் எதிர்காலம் என தெரிவித்தார். புது அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பொத்தம் பொதுவாக சிந்திக்காமல், கொள்கை முடிவு என அரசியல் மாதிரி பேசிக் கொண்டு இருப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது அல்ல எனவும் தெரிவித்தார். 

முதலமைச்சர் நடத்தக் கூடிய பள்ளியிலேயே மூன்று மொழிகள் இருக்கின்றது, ஏழை குழந்தைகளுக்கு இரண்டு மொழி, பணம் கொடுத்து படிப்பவர்களுக்கு மூன்று மொழி என இருக்கக் கூடாதா ? இப்படி நடந்து கொண்டதால் தான் தி.மு.க வை மக்கள் புறக்கணித்தார்கள், மீண்டும் அதே தவறை செய்ய வேண்டாம் என்பது என் கருத்து எனவும் தெரிவித்தார்.

மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வாக்களித்து இருக்கிறார்கள் என தெரிவித்த அவர், திமுகவின் தொடர்ச்சி போல த.வெ.க ஆட்சி இருப்பது நல்லது அல்ல , ஒரு தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் தி.மு.க கூட்டணி கட்சிகளின் அழுத்ததிற்கு அடிபணிந்து மாற்றம் இல்லாமல் செய்து விடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

இன்றைய (நேற்று) மைய குழு கூட்டத்தில் எதனால் தோல்வி அடைந்தோம், என்பது உட்பட விவகாரங்கள் விவாதிக்க இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

தி.மு.க வை நாங்கள தோற்கடிப்போம் என நினைத்தோம், ஆனால் த.வெ.க தோற்கடித்து விட்டது, ஏதோ ஒன்று நிறைவேறி இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

நாங்கள் வெற்றி பெற வேண்டும் என நினைத்து இருப்பது நிறைவேறவில்லை எனவும் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுக்கு முன்பு மையக்குழு கூட்டம் நடந்தது, தற்பொழுது தேர்தல் முடிவுக்கு பின்னால் கூட்டம் நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

அ.தி.மு.க கூட்டணி பயங்கரமாக தோற்கடிக்கப்படவில்லை , தி.மு.க வின் பயங்கரம் தோற்கடிக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.

அதே வேளையில் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் , பா.ஜ.க மீண்டு எழுந்து வரும், 2031 எங்களுக்கான ஆட்சி என்ற இலக்கில் செயல்படுவோம் எனவும் குறிப்பிட்டார்.

சனாதனம் குறித்து உதயநிதி பேசுகிறார், த.வெ.கவில் ஆதவ் அர்ஜூனா ,முஸ்தபா என த.வெ.க எம்.எல்.ஏ கள் சனாதானத்தை பேசுவதை விஜய் கண்டிக்க வேண்டும் எனவும் , இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திக் கொண்டு இருந்தால் வாக்களித்தவர்கள் வருத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

ரீல்ஸ்ல இருந்து ரியல்க்கு வரனும் , முதல்வர் அறையிலேயே ரீல் எடுக்கிறார்கள், இதை அதிகாரிகள் கண்டித்து இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் துறையில் 

17 லட்சம் கட்டுமான பணி டெண்டர் , 6 மணி நேரத்தில் நிறைவடைந்து இருக்கிறது, இது கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

கிட்னி திருட்டு விசாரணை முடுக்கி விடப்பட வேண்டும், சென்ற ஆட்சியில் என்ன தவறுகள் நடந்ததோ அது நடக்காமல் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆனால் தற்போது இரட்டிப்பாக நடக்கின்றதோ என என்ன தோன்றுகின்றது, ஒரு வாரத்தில் பாலியல் தொல்லைகள், கொலைகள் என அதிகரித்து இருக்கிறது எனவும் தெரிவித்தார். 

பாட்டிலுக்கு 10 ரூபாய் என பாடியதை போல, பாட்டிலுக்கு 20 என பாடப்போறீங்களா ?இல்லைன்னு ஆடப்போறாங்களா? குடிச்சிட்டு ஆடப் போறாங்களா ஒண்ணுமே புரியவில்லை எனவும் தெரிவித்தார்.

முதல்வர் காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் இருக்கிறார், ஆனால் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ அதிகாரிகள் கூட்டம் எப்படி நடத்தினார் என்பதை பார்க்கும் பொழுது கவலைப்பட வேண்டி இருக்கிறது , 

புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி நடக்க வேண்டும் என வழிகாட்டுதல்களை அரசாங்கம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஒரே எம்.எல்.ஏ மட்டும் இருந்த திமுக ஆட்சிக்கு வந்தது, இரண்டு எம்பிக்கள் மட்டுமே இருந்த நாங்கள் தற்பொழுது 22 மாநிலங்களை ஆளுகின்றோம், இந்தியாவை ஆளுகின்றோம் எனவும், இந்த தோல்வி யாரும் எதிர்பார்க்காத ஒன்று ,

மழைதூறும் என நினைத்தோம், ஆனால் சுனாமியே வந்துவிட்டது, இதில் இருந்து மீண்டு வர தெம்பும் இருக்கிறது, கொள்கையும் இருக்கிறது என்றும் ரில்ஸ்ஸை நம்புபவர்கள் கிடையாது, ரியல் வாழ்க்கையும் நம்புவர்கள் நாங்கள் என தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் அமைச்சரவையில் சேர மாட்டோம் என சொல்லுகின்றனர், அதற்கு பா.ஜ.க உள்ளே வந்து விடக் கூடாது , கவர்னர் உள்ளே வந்து விடக் கூடாது என பேசுகின்றனர் எனவும், காங்கிரஸ் வி.சி.க என அனைவரும் பதவி ஆசைக்காக போய்விட்டு கவர்னரை குறை சொல்வது சரியல்ல எனவும் தெரிவித்தார்.

தி.மு.க கூட்டணி உடைந்து சுக்கு நூறாகி விட்டது என தெரிவித்த அவர், அ.தி.மு.க வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை எனவும் தெரிவித்தார்.

எல்லாக் கட்சியும் ஐ.டி விங வைத்து இருந்தும், அதை சரியாக பயன்படுத்தவில்லை, வாட்ஸ் அப்பில் மட்டும் 37 லட்சம் குழுக்கல் அவர்கள் வைத்து இருந்ததாக சொல்கின்றனர் எனவும், குழந்தைகளை பயன்படுத்துவது தவறு எனவும் தெரிவித்தார்.

18 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது தவறு , அது ரியலா பயன்படுத்தினாலும் தவறு, ரீலாக பயன்படுத்தினாலும் தவறு எனவும் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் பெற்ற தோல்வியை, வெற்றி பெறக்கூடிய தோல்வியாக கருதுகின்றோம் எனவும் தெரிவித்த அவர்,

தேசிய தலைவர்கள் வந்தார்கள் , பேசிய தலைவராக இல்லாமல் விஜய் ஜெயித்துவிட்டார், சினிமாவில் பேசியதை வைத்து, ஜெயித்து இருக்கிறார்.

சினிமா மாயையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது, மற்ற மாநிலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இனி உங்களிடம் பேசுவதுதான் என்னோட ரோல் என தெரிவித்த அவரிடம்,

அண்ணாமலை தலைவராக மீண்டும் வருகின்றாரா என்ற கேள்விக்கு, கையெடுத்து கும்பிட்டு விட்டு கிளம்பினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: