எங்க வேணா சொல்லிக்கோங்க, எனக்குப் பயமில்லை” ; பொள்ளாச்சியில் 24 மணி நேரமும் சட்ட விரோத மது விற்பனை செய்த மூதாட்டி - வீடியோ வைரலானதால் விழித்துக் கொண்ட கிழக்கு போலீஸ் அதிரடி வழக்குப் பதிவு!!!
பொள்ளாச்சி அருகே சூ சூளேஸ்வரம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தந்தை பெரியார் நகர் அழகப்பா காலனியில் வசித்து வரும் சிவகாமி என்ற மூதாட்டி சட்ட விரோதமாக மது பாட்டில் விற்றுக் கொண்டு இருக்கிறார்.
அந்த மூதாட்டிடம் கேட்டால் நீங்கள் எங்கு வேணாலும் சொல்லி கொள்ளுங்கள் எனக்கு பயம் இல்லை என்று ஆவேசமாக பேசுகிறது.
இதனால் இங்கு குடியிருக்கும் பொது மக்களுக்கு இரவு நேரத்திலும் மதுவிற்கும் நபர்கள் பக்கத்தில் குடியிருக்கும் வீட்டிற்கு வந்து கதவை தட்டுகிறார்கள் என்றும் இதனால் குடியிருக்க முடியவில்லை.
காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கை இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என காவல் துறையிடம் கேட்டால் வயதான மூதாட்டி வாழ்வாதாரத்திற்காக விற்கிறார் என்றும் கூறுகின்றனர்.
மது வாங்க வரும் நபர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை திருடி செல்கிறார்கள் என்றும் இதனால் அருகில் குடியிருக்க முடியவில்லை.
காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நடந்தால் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் ஏற்படும் ஈடுபடுவோம் என்று கூறினர் மேலும் இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்: