மூலப்பொருள், டீசல் விலை உயர்வு ; 25 ஆயிரம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு !!!
மூலப்பொருள், டீசல் விலை உயர்வு காரணமாக கோவையில் 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
கோவையில் 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் மேலானவர்கள் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனர். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் எந்திரங்கள் தேவையான உதிரி பாகங்கள், எந்திர மூடிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வார்ப்பட தொழிலுக்கு நிலக்கரி, கேஸ் ஆகியவை முக்கிய எரிபொருளாக உள்ளன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 9 முதல் ரூபாய் 10 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இது தவிர கடந்த 15 ஆம் தேதி முதல் சரக்கு வாகன கட்டணங்கள் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருளாளர்களான தாமிரம், அலுமினியம், வெண்கலம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது.
இது குறித்து தொழில்துறை நான் கூறும்போது ;
மூலப்பொருள் விலை ஏற்றம், மின்சார பிரச்சனை, மின் கட்டண உயர்வு, தொழிலாளர் சம்பளம் நெருக்கடி, சர்வதேச சந்தையில் உற்பத்தி பொருட்களை விற்க முடியாத நிலை என பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தற்பொழுது தொழிற்சாலைகளுக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக் கூடாது என மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது கவலை அளிப்பதாகவும், இந்த நடவடிக்கை தொழில் துறையினர் முழுமையாக முடக்கும் என்றும், டீசல் சார்ந்த இயங்கும் பெரிய தொழிற்சாலைகள் மூலம் சிறு, குறு தொழில்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றன. இந்த கட்டுப்பாடுகளால், ஒட்டுமொத்த உற்பத்தி சங்கிலியும் தடைபடும். இத்தகைய சுமைகளால் தொழில்கடனை திரும்பி செலுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. வட்டி விகிதத்தையாவது ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை, தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் பேசி இந்த நெருக்கடிகளுக்கு மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு இதுவரை தீர்வு காணப்படவில்லை, வெளிச் சந்தையில் ரூபாய் 8,000 முதல் ரூபாய் 10 ஆயிரம் வரை கொடுத்து சிலிண்டர் வாங்கி தொழில் செய்யும் அளவுக்கு லாபம் இல்லை, இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
மேலும் கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் சங்கத்தினர் மற்றும் ரயில்வே நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்து கொடுக்கும் தொழில் அமைப்புனர் கூறும் போது;
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து தொழில்களும் முடங்கும் நிலை தள்ளப்பட்டு உள்ளன. டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்து உள்ளது. லாரி உரிமையாளர்கள் சங்கம் வாடகை கட்டணத்தை உயர்த்தி உள்ளது. மூலப்பொருள் உற்பத்தி செலவு அதிகரிப்பதால் அவற்றின் விலையும் உயரும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் தொழில் துறையினருக்கும், தொழிலாளர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. செலவு அதிகரிப்பதால், ஏற்கனவே மத்திய, மாநில அரசு நிறுவனங்களுக்கு பெற்ற ஆர்டர்களை செய்து கொடுக்க முடியாமல் உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகள் மூலப்பொருள் விலையை கட்டுப்படுத்தவும், மூலப்பொருட்களை குறைந்த விலையில் விற்கவும், பல்வேறு இடங்களில் புதிய மையங்களை தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.

0 கருத்துகள்: