தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ‘வி தி லீடர்ஸ்’ அண்ணாமலை பங்கேற்பு ; “909 இளம் பொறியாளர்களுக்கு சான்றிதழ் விநியோகம்” !!!
கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா விழாவில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் வி த லீடர்ஸ் அறக்கட்டளையின் தலைவர் திரு அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற மாணவருக்கு கேடயம் வழங்கினார்..
கோவை கணியூர் மற்றும் கருமத்தம்பட்டியில் அமைந்து உள்ள தனியார் கல்வி குழுமத்தின் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா கருமத்தம்பட்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் பிரேமா ரவி கலை அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 23 பொறியியல் துறை மற்றும் மேலாண்மை துறையின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் தங்களது சான்றிதழ்களை பெற்றனர்
தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் 38 வது பட்டமளிப்பு விழா, பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 25 வது பட்டமளிப்பு விழா, பார்க் குளோபல் மேலாண்மை கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா, தமிழ்நாடு கட்டிடக்கலை கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா, மற்றும் பார்க் தொழில்நுட்பக் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் வி த லீடர்ஸ் அறக்கட்டளையின் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொறியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
909 இளங்கலை பொறியியல் மற்றும் முதுகலை பொறியியல் பட்டதாரி மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை மிக பிரமாண்டமான விழாவில் பெற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் இளநிலை இன்ஸ்ட்ருமென்டேஷன் & கண்ட்ரோல் பொறியியல் துறையின் மாணவர் ரிஷிபாலா
அண்ணா பல்கலைக் கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்று உள்ளார். தங்கப் பபதக்கத்தை அண்ணாமலையிடம் இருந்து பெற்றுக் கொண்டார். மேலும் மூன்று இளங்கலை பொறியியல் பட்டதாரிகள் பல்கலைக் கழக அளவில் ரேங்க் பெற்று உள்ளனர்.
தங்கப் பதக்கம் வென்ற பட்டதாரி ரிஷிபாலா -வை கௌரவிக்கும் விதமாக மற்றும் கல்லூரியின் வழக்கமாக, அவர் 4 ஆண்டுகளில் கல்லூரிக்கு செலுத்திய கல்வி கட்டணம் முழுமையாக திருப்பிக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பட்டதாரிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார்.
தனியார் கல்லூரி கல்வி குழுமத்தின் தலைவர் Dr . P.V. ரவி மற்றும் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி தலைமையில் இவ்விழா நடைபெற்றது. இறுதியாக தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

0 கருத்துகள்: