கேரளத்தில் ஷிகெல்லா நோய் பரவல் எதிரொலி ; கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார் !!!
கேரளத்தில் ஷிகெல்லா நோய் பரவுவதன் எதிரொலியாக கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.
கேரள மாநிலத்தில் ஷிகெல்லா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் வயநாடு மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த பாதிப்பு கோழிகோட்டை சேர்ந்த சிறுமி உயிர் இழந்து உள்ளாள்.
தற்பொழுது தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது. இந்நிலையில் கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு தென்பட்டது. இதனால் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளத்தில் ஷிகெல்லா நோய் பரவல் எதிரொலியாக தமிழகம் - கேரளா எல்லையில் சுகாதாரத் துறையினர் மருத்துவக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீவிர சோதனைக்கு பின்னரே கேரளத்தில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
கேரளத்தில் ஷிகெல்லா நோய் பரவல் எதிரொலியாக கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இங்கு 11 படுக்கைகள் போடப்பட்டு உள்ளன. மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இது குறித்து மருத்துவ அதிகாரிகள் கூறும்போது;
கோவை மாவட்டத்தில் இதுவரை ஷிகெல்லா நோய் பாதிப்பு இல்லை, ஆனாலும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தீவிர காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனை இருந்தால் சுயமாக மருந்து உட்கொள்ளாமல். உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும் என்றனர்.

0 கருத்துகள்: