திங்கள், 22 ஜூன், 2026

கிணற்றில் சாக்குமூட்டை பிணம் : கள்ளக் காதல் தகராறில் வடமாநிலப் பெண்ணை கொன்ற கணவர் கைது !!

SHARE

 கிணற்றில் சாக்குமூட்டை பிணம் : கள்ளக் காதல் தகராறில் வடமாநிலப் பெண்ணை கொன்ற கணவர் கைது !!

பீகாருக்கு எஸ்கேப் ஆகிவிட்டு தடயங்களை அழிக்கத் திரும்பியபோது கைது செய்த தனிப்படை; துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிய கொடூரம் அம்பலம் !!!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடந்த வடமாநில பெண் கொலையில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார். அவர் தடயங்களை அழிக்க வந்த போது போலீசில் சிக்கினார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் கோபி ராசிபுரம் பகுதியில் செயல்படாத தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள கிணற்றில் இருந்து கடந்த 17 ஆம் தேதி கடும் துர்நாற்றம் வீசியது. 

இது குறித்து தகவல் அறிந்து சிறுமுகை போலீசார் மற்றும் அன்னூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி தேடினர். அப்பொழுது சாக்கு முட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் பிணம் மீட்க்கப்பட்டது.

அவரை யாரோ ? கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது. இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மேட்டுப்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில், ஆய்வாளர் செல்வம் மற்றும் போலீசார் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பீகார், கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி ஆகிய பகுதிகளில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் கொலை செய்யப்பட்டது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா தேவி என்பதும், அந்தப் பெண்ணை அவரது கணவர் சோட்டா லால் மண்டல் கொலை செய்ததும் தெரிய வந்தது.

சோட்டா லால் மண்டலை குருக்கிளையும் பாளையம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவல்கள் குறித்து காவல்துறையினர் கூறும் போது ;

பீகாரை சேர்ந்த சோட்டா லால் மண்டலுக்கும் - சங்கீதா தேவிக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சோட்டா லால் மண்டல் மனைவியுடன் கோவையில் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதற்கு இடையிலே சங்கீதா தேவிக்கும் சிலருடன் கள்ளக் காதல் இருந்து உள்ளது. மேலும் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சோட்டா லால் மண்டல், தனது மனைவி சங்கீதா தேவதையை சம்பவத்தன்று துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, உடலை சாக்கு முட்டையில் கட்டி கிணற்றில் வீசிவிட்டு பீகார் தப்பி சென்றார். அங்கு இருந்து தடயங்கள் அழிப்பதற்காக திரும்பி வந்த போது சோட்டா லால் மண்டல் போலீசில் சிக்கி உள்ளார் என்றும், காவல்துறையினர் கூறினர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: