புதன், 3 ஜூன், 2026

கோயம்பேடு பார் தகராறு: சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு !!!

SHARE

 கோயம்பேடு பார் தகராறு: சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு !!!

கோயம்பேடு பாரில் ஏற்பட்ட தகராறில் கார் மோதி இளம்பெண் உயிரிழந்த நிலையில், தற்போது அவருடன் இருந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யான்சி (18) என்கிற இலங்கை தமிழ் பெண் சென்றுள்ளார். தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் சென்ற அவர், அங்கு உள்ள பாரில் நடனம் ஆடி உள்ளார்.

அப்போது நடனமாடுவதில் இவர்களுக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதை அடுத்து, பாரில் இருந்த பவுன்சர்கள் இரு தரப்பினரையும் வெளியேற்றினர்.

ஆனால், வெளியே சென்ற பிறகும் அவர்கள் சண்டை போட்டு உள்ளனர். பின்னர் அங்கு இருந்த பொதுமக்கள் இருதரப்பினரையும் விலக்கி விட்டு அங்கு இருந்து அனுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, யான்சி மற்றும் அவரது நண்பர்கள் 4 பெரும் ஒரே இருசக்கர வாகனத்தில் அங்கு இருந்து சென்று உள்ளனர்.

அப்போது, எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் சென்ற கார் மீது யான்சி தரப்பினர் கல் எறிந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், தங்களின் காரை வேகமாக ஓட்டிச் சென்று அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதினராம்.

இதில் யான்சி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொரு 17 வயது சிறுமி படுகாயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சம்பவம் நடந்த தனியார் மதுபான பாரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாசினியின் தோழியான 17 வயது சிறுமி உயிரிழந்தார். இதனால் இசம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.


இதை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு கொலை வழக்கை கோயம்பேடு போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: