வெள்ளி, 26 ஜூன், 2026

‘சமூக வலைதளங்களில் நடிகர்களுக்கும் கருத்து சுதந்திரம் வேண்டும் ; தனிப்பட்ட தாக்குதல் வேதனை அளிக்கிறது - கோவையில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி !!!

SHARE

 ‘சமூக வலைதளங்களில் நடிகர்களுக்கும் கருத்து சுதந்திரம் வேண்டும் ; தனிப்பட்ட தாக்குதல் வேதனை அளிக்கிறது - கோவையில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி !!!

​'கட்டா குஸ்தி-2' வெற்றி இயக்குநர் செல்லாவுக்கு முக்கியம்; முதல்வர் விஜய் அதிகாலை மாரத்தானில் பங்கேற்றது ஆரோக்கியமான முன்னுதாரணம் !!!

கோவை அவிநாசி சாலையில் உள்ள திரையரங்கில் நடைபெற்ற 'கட்டா குஸ்தி-2' திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில்,

சமூக வலைதளங்களில் தாம் பதிவிட்ட கருத்து யாரையும் குறிப்பிட்டோ, ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ அல்ல என்றும், சமூக வலைதளங்களில் நடிகர்களுக்கும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் கூறினார். 

கருத்து வேறுபாடுகளை தெரிவிக்கலாம்; ஆனால் தனிப்பட்ட தாக்குதலும் தரக்குறைவான விமர்சனங்களும் வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு பிறகு தனக்கு Autoimmune பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், அதற்கு நிரந்தர சிகிச்சை இல்லாததால் அதை கட்டுப்பாட்டில் வைத்தே வாழ வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறினார். சமூக வலைதளங்கள் மூலம் பலர் ஆலோசனைகள் வழங்கியது தனக்கு பயனுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

தனது படங்களுக்கு கோவையில் எப்போதும் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், கோவைக்கு வந்து பட விளம்பரம் செய்தால் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறினார்.

முதல்வர் விஜய் அதிகாலை மாரத்தானில் பங்கேற்றது ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல முன்னுதாரணம் என்றும், திரைப்படத் துறையில் தேவையான மாற்றங்கள் படிப்படியாக நடைபெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போது இல்லை என்றும் கூறினார்.

மேலும், 'கட்டா குஸ்தி-2' படத்தில் நடித்த சேலத்தைச் சேர்ந்த குஸ்தி கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளதாகவும், 11 ஆண்டுகளாக தன்னுடன் பயணிக்கும் இயக்குநர் செல்லாவுக்காக இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்தார். 'ராட்சசன்-2' திரைப்படம் விரைவில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம் என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: