மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி !!!
தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று இரவு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
95 வயதான தயாளு அம்மாள் வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தயாளு அம்மாவை முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரும் தயாளு அம்மாளின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அனைவரும் நேரில் பார்த்து அவருக்கு அளிக்கப்பட்டவரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி தயாளு அம்மாள் வயது மூப்பு காரணமாக உடல்நிலை குறைவு ஏற்பட்டு அவ்வப் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகிறார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே போல் தயாளு அம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சை பெற்றபின் உடல்நலம் தேறி அவர் மீண்டும் இல்லம் திரும்பினார்.
இந்த சூழலில் அவ்வப் போது உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வந்த தயாளு அம்மாளுக்கு சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில், அவருக்கென பிரத்யேக மருத்துவ உபகரணங்கள் மூலம் அவ்வப்போது அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
இந்த சூழலில் தயாளு அம்மாளுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக இன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தயாளு அம்மாளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும், அவரது உடல் நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்: