41 பேரை பலிவாங்கிய கரூரின் அந்த மெகா துயரம்” ; த.வெ.க கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் முதன்முறையாக ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் ஜோசப் விஜய் - விமர்சனங்களை உடைக்க நடவடிக்கை !!!
“சென்னையில் ஆறுதல்; இப்போது கரூரில் ‘லைவ்’ விசிட்”: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் அசுரப் பாதுகாப்புடன் கரூருக்கு பயணம்!!!
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதன்முறையாக ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் பயணம் மேற்கொள்கிறார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஜோசப் விஜய், கரூர் மாவட்டத்திற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப் பூர்வ பயணம் இதுவாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில், 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த சம்பவத்திற்கு பிறகு, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வர வழைத்து, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருந்தார்.
அப்போது கரூருக்கு நேரில் செல்லாமல், விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

0 கருத்துகள்: