சனி, 20 ஜூன், 2026

ராகுல் காந்தி பிறந்தநாள் ; விருத்தீஸ்வரர் ஆலயத்தில் பிராத்தனை - விசேஷ பூஜையுடன் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர் !!!

SHARE

 ராகுல் காந்தி பிறந்தநாள் ;  விருத்தீஸ்வரர் ஆலயத்தில் பிராத்தனை - விசேஷ பூஜையுடன் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர் !!!

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை ஒட்டி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கோவை வடமதுரை அருள்மிகு விருத்தீஸ்வரர் திருக்கோவில் விசேஷ பூஜை நடைபெற்றது.

இந்த விசேஷ பூஜைக்கு முன்னாள் மாவட்ட தலைவர் பி வி மணி தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி டி மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். 

இதில் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீண்ட ஆயுளுடன் நெடு நாள் வாழவேண்டி விருந்திஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக் கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, சர்க்கிள் தலைவர்கள் துடியலூர் சுரேந்திர பாபு, கவுண்டம்பாளையம் நாகராஜ், செந்தில்குமார், சிங்காரவேலு, மாவட்ட ஐடி விங் தலைவர் அமர்நாத், நகரத் தலைவர் என் எம் ராஜேந்திரன், டி சி சி உறுப்பினர்கள் மோகன், தம்பி பார்த்திபன், 

வட்டார நிர்வாகிகள் கோவிந்தராஜ், தாளியூர் ராஜேந்திரன், மருதமலை பரமேஸ்வரன், அசோகன், தடாகம் அம்சராஜ், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கணேசன், வளர்மதி, செல்வராஜ், தாமோதரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி வி ஆர் பிரபு, வேலுமணி, சுந்தர்ராஜ், வரதராஜ், ஜனார்த்தன நாயுடு, செந்தில்குமார், சண்முகசுந்தரம், ஜோசியர் சண்முகம், வேலுசாமி, கவுண்டம்பாளையம் பொன்ராஜ், நவாப், ஊர் கவுண்டர் செல்வராஜ், தொப்பம்பட்டி மனோகர், பண்ணாரி நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

அதேபோல் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உருமாண்டம்பாளையம் பிரிவில் அமைந்துள்ள எல்லை மாகாளி அம்மன் கோவிலில் ராகுல் காந்தியின் பிறந்த நாள் சிறப்பு வழிபாடு துடியலூர் சர்க்கில் தலைவர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் பி வி மணி, மோகன்ராஜ், மெளனசாமி, சின்னு ராமகிருஷ்ணன், 15 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்நாமணி பச்சை முத்து, 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: