சனி, 20 ஜூன், 2026

கோவையில் உள்ள மலைக் கிராமத்தில் நெகிழ்ச்சி: பழங்குடியின மாணவர்களுக்கு தேடிப் போய் உதவிய பெண் தொழிலதிபர்!!!

SHARE

 கோவையில் உள்ள மலைக் கிராமத்தில் நெகிழ்ச்சி: பழங்குடியின மாணவர்களுக்கு தேடிப் போய் உதவிய பெண் தொழிலதிபர்!!!

​‘கல்வியே தலைமுறையைக் காக்கும் ஆயுதம்’: பொருளாதாரச் சுமையில் தவித்த குழந்தைகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய பெண்!!!

கோவை மாவட்டம், ஆனைக்கட்டி மலைப் பகுதியின் அடர்ந்த வனப்பின்னணியில் அமைந்து உள்ள கோபனாரி பழங்குடியினர் கிராமத்து மாணவ-மாணவிகளின் கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக, கோவையைச் சேர்ந்த இளம் தொழிலதிபரும் விவசாயியுமான சமூக ஆர்வலர் உமா மகேஷ்வரி என்பவர் உதவிக்கரம் நீட்டி உள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 கோபனாரி பழங்குடியினர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சூழலில் உள்ள பழங்குடி சமூகக் குழந்தைகள் பெருமளவில் பயின்று வருகின்றனர். தனது விவசாயத் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் தற்செயலாக இந்த அரசுப் பள்ளியைக் கடந்து சென்ற உமா மகேஷ்வரி, அங்கு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அடிப்படைத் தேவைகளும், போதிய விளையாட்டு உள்கட்டமைப்புகளும் இல்லாத அசெளகரியமான அறிந்து மிகுந்த கவலை அடைந்து உள்ளார்.

​மலைக் கிராமக் குழந்தைகளின் தற்போதைய அவல நிலையைத் தனது சுய முயற்சியால் உணர்ந்த உமா மகேஷ்வரி, உடனடி களத்தில் இறங்கி, இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தேவையான நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். மேலும், மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு கிரிக்கெட் மட்டைகள், பந்துகள், ஸ்டம்ப்புகள், கைப்பந்துகள் (Volleyball), கால்பந்துகள் (Football), எறிபந்துகள் (Throwball), டெனிகாய்ட் மற்றும் செட்டில் கார்க் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி உள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சமூக ஆர்வலர் உமா மகேஷ்வரி, 

"பொருளாதார ரீதியாக முடக்கப்பட்ட பழங்குடியின கிராமப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற தரைமட்ட உதவிகள் (Ground Help) மிக மிக அவசியமான ஒன்றாகும். இந்த விளிம்புநிலை குழந்தைகளின் கல்வி மேம்பாடு மட்டுமே அவர்களின் ஒட்டுமொத்த தலைமுறையையும் அடுத்த கட்டத்திற்கு கம்பீரமாக எடுத்துச் செல்ல உதவும்" எனத் தனது பேட்டியில் உருக்கமாகத் தெரிவித்தார். 

பழங்குடியின மக்களின் வாழ்வியல் வளம் பெற, அவர்களின் குழந்தைகளின் கல்விக்குத் தாம் தொடர்ந்து உதவப் போவதாகப் கூறியவர், 'கல்வியே தலைமுறைகளைக் காக்கும் ஆயுதம்' என்ற தத்துவப் பூர்வமான கருத்தையும் முன்வைத்தார்.

​பொருளாதாரச் சுமையால் தவித்து வந்த தங்களது குழந்தைகளின் கல்வி கனவை நனவாக்க, தேடி வந்து உதவிய இந்த இளம் பெண் தொழிலதிபரின் நற்செயலுக்கு, கோபனாரி பள்ளி ஆசிரியர்கள், மழலை மாணவ-மாணவிகள் மற்றும் பழங்குடியினப் பெற்றோர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுக்களும் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: