த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாளை அசைவ விருந்துடன் கொண்டாட்டம் ; முதியோர்களுக்கு மருத்துவ உதவித்தொகை, அரிசி மூட்டைகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் - 'பசியில்லா உலகம் படைப்போம்' என இளம் பெண் தொழிலதிபர் !!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவையில் ஏழை-எளிய பொதுமக்களுக்கு பிரம்மாண்ட அசைவ விருந்து, இலவச அரிசி மூட்டைகள் மற்றும் முதியோர்களுக்கு அவசர மருத்துவ உதவித் தொகை ஆகியவற்றை வாரி வழங்கி கோவை தன்னார்வலர் உமா மகேஷ்வரி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அவரது கட்சித் தொண்டர்களும், பல்வேறு முற்போக்கு தன்னார்வ அமைப்புகளும் களத்தில் இறங்கி ஏழை - எளிய மக்களுக்கு அடுக்கடுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவையில் புகழ்பெற்ற தன்னார்வலரும் இளம் பெண் தொழிலதிபருமான உமா மகேஷ்வரி, கோவை கஸ்தூரிநாயக்கன் பாளையம் பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கித் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த மக்கள் நல நிகழ்வின் போது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சமூக ஆர்வலர் உமா மகேஷ்வரி,
த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை ஆண்டுதோறும் மக்கள் நலத் திட்டங்கள் வழங்கித் தாம் மிக விமரிசையாகக் கொண்டாடி வருவதாகக் குறிப்பிட்டார். இந்த ஆண்டு, தங்களது தலைவர் அரசியல் களத்தில் தீவிரமாகப் பயணிக்கும் சூழலில் வரும் பிறந்தநாள் என்பதால், இது தங்களுக்குக் கூடுதல் சிறப்புக்கும் உத்வேகத்திற்கும் உரியது எனத் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சிறப்பான நாளில் ஏழை - எளிய மக்களுக்குத் தரமான அன்னதானமும், அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசி மூட்டைகளும், தற்போதைய பொருளாதாரச் சூழலில் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் முதியோர்களுக்குப் போர்க்கால அடிப்படையில் மருத்துவ நிதியுதவியும் வழங்கியது தமக்கு மட்டற்ற மனநிறைவைத் தருகிறது என்றார்.
பசியில்லா உலகம் படைப்பதில் தங்களது தலைவர் விஜய் அவர்கள் பல்வேறு ஆக்கப் பூர்வமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார் என்றும், அதன் ஒரு பகுதியாகவே தாம் அன்னதானம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவதற்குத் முக்கியத்துவம் தந்து வருவதாகவும் பகிர்ந்தார். இதன் மூலம் பயன்பெற்ற அடித்தட்டு பொதுமக்களது வாழ்த்துகளும் தூய ஆசிர்வாதமுமே தங்களது தலைவர் அவர்களுக்குத் தாங்கள் வழங்கும் உண்மையான பிறந்தநாள் பரிசு என்று உருகிய அவர், அவரது அரசியல் வெற்றிப் பயணம் அடுத்தடுத்து சிறப்பாக அமைய மனதார வாழ்த்துவதாக கூறினார்.

0 கருத்துகள்: